×
 

இனி தான் ஆட்டமே.. இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி அமைத்த நடிகர் சூரி..! 

நடிகர் சூரி இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜன் இயக்கம் என்றால் அதிரடி சண்டை காட்சிகளை வைத்திருப்பார், ஆனால் காதல் என்ற வார்த்தைகளும், ரொமன்ஸ் என்ற வார்த்தைகளும் இவர் படத்தில் சுத்தமாக இருக்காது என்னும் அளவிற்கு தனது இயக்கத்தை மக்கள் மனதில் கொண்டு சேர்த்தவர். அதுமட்டும் அல்லாமல் பிரபலங்ளின் படம் என்றால் அது லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் என்ற பெயரையும் பெற்றவர்.

அப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து வீடியோ சாங்கில் நடித்து அனைவரையும் திக்கு முக்காட வைத்தார். இப்படி இருக்க, இதுவரை இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட். குறிப்பாக, நடிகர் விஜய் வைத்து "மாஸ்டர்" திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதில், நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை வைத்து படத்தின் காட்சிகளை அசத்தியிருப்பார். அது மட்டுமல்லாது  உலகநாயகன் கமல்ஹாசன் மனதை கவரும் அளவிற்கு கதையை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் தனது இயக்கத்தில் "விக்ரம்" படத்தை தயாரித்து, கமலஹாசனுக்கு தலை சிறந்த வெற்றிப் படத்தை கொடுத்தார்.

இதையும் படிங்க: என்ன சூரி கலக்குறீங்களே.. எக்ஸ் தளமே அவர் கண்ட்ரோல் தான்.. ஒரே போஸ்டில் வேர்ல்டு லெவல் ஃபேமஸ்..!

மேலும், "கைதி" திரைப்படத்தை மிகவும் மிரட்டலாக காண்பித்து அசத்தி இருப்பார். சமீபத்தில் நடிகர் விஜயை வைத்து இவர் இயக்கிய "லியோ" திரைப்படம் பல விமர்சனங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி படமாக ஓடியது. இவருடைய படங்கள் அனைத்தும் போதை தடுப்பு மற்றும் கேங்ஸ்டர் பேட்டனை வைத்து இயக்கி  வரும் நிலையில், தற்பொழுது இவர் ரஜினியை வைத்து இயக்கி இருக்கும் படம் தான் "கூலி". 

கிட்டத்தட்ட சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் மட்டும் ரூ.150 கோடி, இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் ரூ.50 கோடி, மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், டெக்னீஷன்கள் என படத்தில் வேலை பார்த்த அனைவரின் சம்பளமும் ரூ.150 கோடி. இதுமட்டுமல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் பப்லிசிட்டி செலவுகள் மட்டும் ரூ.25 கோடி, எனவே இவை அனைத்தும் மொத்தமாக பார்த்தால் கூலி படத்தின் முழு பட்ஜெட் ரூ.375 கோடி என கூறப்படுகிறது. 

நேற்று இந்த படத்தின் "வாரான் சொல்லிக்கோ" என்ற பாடல் வெளியாகி மக்களை மகிழ்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் வளர்ந்து வரும் நடிகரான சூரி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை மலையாள நடிகரான மோகன்லால் நடிப்பில் வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்தினை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்க உள்ளாராம். இப்படி இருக்க தற்பொழுது எல்ரட் குமாரின் ஆர்.எஸ் இன்போ நிறுவனம் தயாரிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் "மண்டாடி" என்ற படத்தில் சூரி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "அந்த மனசு தான்யா கடவுள்".. ஈக்குவாலிட்டினா இப்படி இருக்கனும்.. பலரது கவனத்தை ஈர்த்த நடிகர் சூரியின் பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share