எனக்கும் இயக்குநருக்கும் நடந்த சண்டை இதுதான்..! விழாவில் போட்டுடைத்த மக்கள் செல்வன்..!
'தலைவன் தலைவி' பட விழாவில் தனக்கும் இயக்குனருக்கும் இடையே சண்டை என விஜய்சேதுபதி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என அன்புடன் அழைக்கப்பட்டு இன்று தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளவர் தான் நடிகர் விஜய்சேதுபதி. இவரது நடிப்புக்கும் சிரிப்புக்கு பேச்சுக்கும் தனித்துவமான ரசிகர் பட்டாளம் உள்ளனர். குறிப்பாக இவர் ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக வருவதையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். ஏனெனில் வில்லனாக வரும்பொழுது பயங்கர மாஸாக இருக்கிறாராம் விஜய் சேதுபதி. இப்படி இருக்க, தற்பொழுது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான “தலைவன் தலைவி” பட விழாவில் இவரது வெளிப்படையான பேச்சு, திரை உலகத்தையும் ரசிகர்களையும் ஆழமாக பாதித்துள்ளது என்றே சொல்லலாம். வருகின்ற ஜூலை 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள “தலைவன் தலைவி” திரைப்படத்தில், விஜய்சேதுபதியும் நடிகை நித்யா மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இது கணவன் மனைவி உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மிகவும் தெளிவாக, உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை என்கிறார் இயக்குநர் பசங்க பாண்டிராஜ். இதில் விஜய் சேதுபதி, ‘ஆகாசவீரன்’ எனும் வித்தியாசமான பெயருள்ள கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம். இந்த சூழலில், சென்னையில் நடைபெற்ற இத்-திரைப்பட விழாவில் பேசிய விஜய்சேதுபதி, கடந்த காலம் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசினார். அவர் பேசுகையில், " எனக்கும், இயக்குநர் பாண்டிராஜ் சார்-க்கும் ஒருசில மனஸ்தாபங்கள் இருந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளாமல் நீண்டநாட்கள் தவிர்த்து இருந்தோம். அவருடன் பணி செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் நானும் அவரும் ஒரே மனநிலையில் இருந்தோம். ஆனால், இயக்குநர் மிஷ்கின் பிறந்தநாளில் நாங்கள் மீண்டும் சந்தித்தோம். அங்கே தான் மீண்டும் பேசத் தொடங்கினோம்.
அதன் விளைவாகத்தான் இப்போது உருவாகியிருக்கக்கூடிய இந்த படம்" என தெரிவித்தார். மேலும், சமீபத்தில் அவரது மகன் நடித்த “பீனிக்ஸ்” திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவரது மகனை பற்றிய விமர்சனங்கள், கிண்டல்கள் பரவியது. இதனை குறித்து அவர் பேசுகையில், " இப்போது பலரும் ட்ரோல் குறித்து பேசுகிறார்கள். இன்று எதையும் தடுக்க முடியாது. அந்த காலத்தில் கார்ட்டூன் மாதிரி விமர்சனங்கள் இருந்தது. இப்போது ட்ரோல் வருகிறது. புதிய படங்கள் மட்டுமல்ல, பழைய படங்களையும் விமர்சிக்கிறார்கள்.
இதையும் படிங்க: "மாரீசன்" படத்துடன் நேரடியாக மோதும் "தலைவன் தலைவி"..! எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக ரசிகர்கள் பேச்சு..!
நம்முடைய படைப்பை பொது வெளியில் கொடுத்துவிட்டோம் என்றால், அதன் மீது விமர்சனம் வரும். ஊர் வாயை மூட முடியாது.அதேபோல் தான் ட்ரோல் என்பது இப்போது இருக்கும் நையாண்டி. ஆகவே, நாம் தவறு செய்திருந்தால், அதை ஏற்று மாற்றிக்கொள்ள வேண்டும்” என கூறிய அவரது பேச்சு, விமர்சனத்தையும் வளர்ச்சிக்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ளும் விதமாக காட்டுகிறது. எனவே “தலைவன் தலைவி” திரைப்படம், கணவன் மனைவி உறவில் ஏற்படும் சிக்கல்கள், உணர்ச்சிகள், மற்றும் புரிதல்கள் குறித்து பேசுகிறது. இந்த நிலையில், திரைப்படத்தின் மையக்கருத்து மட்டுமல்ல, விஜய்சேதுபதி வெளியிட்ட கருத்துகளும் ஒரே நேர்கோட்டில் செல்கின்றன. இன்று பல்வேறு தம்பதிகள் சிறிய விசயங்களுக்காக சண்டை போட்டுக்கொண்டு திடீரென விவாகரத்துக்குச் செல்வது போன்ற காரியங்களை தடுக்கும் படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய்சேதுபதி – நித்யா மேனன் ஒன்றாக நடிக்கிறார்கள் என்ற செய்தி வெளியான நாளிலிருந்து இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. விஜய்சேதுபதி கடந்த சில வருடங்களாக தன்னுடைய பட தேர்வுகள் மற்றும் நடிப்பில் பல்வேறு வித்தியாசங்களை ஆச்சர்யப்படும் வகையில் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் இந்தப்படம், அவரை மீண்டும் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. எனவே, “தலைவன் தலைவி” திரைப்படம் ஒரு வெறும் கதையல்ல. இது சமுதாயத்துக்கே பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி என்பதால் குடும்ப ஆடியன்ஸ் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 'குடும்ப படம் எடுப்பது மிகவும் சவாலான ஒன்று' – இயக்குநர் பாண்டிராஜ் அட்டகாசமான பேச்சு..!