கவர்ச்சிக்காக மட்டுமே என்னை அழைக்கிறார்கள் - நடிகை பூஜா ஹெக்டே ஓபன் டாக்..!
நடிகை பூஜா ஹெக்டே பெரும்பாலும் சினிமாவில் கவர்ச்சிக்காக மட்டுமே தன்னை அழைப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சினிமா உலகத்தில் விறுவிறுப்பாக பணியாற்றி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் "கூலி", ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றியுள்ளதால், இசை ரீதியாகவும் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது "கூலி" திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ப்ரோமோஷன் மற்றும் டிக்கெட் முன்பதிவுகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், படத்தின் முக்கியப் பாகமாக விளங்கும் பாடலான "மோனிகா" பாடல் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது. இந்த பாடலில் நடனமாடியுள்ள நடிகை பூஜா ஹெக்டே, சமீபத்தில் ஒரு நேர்காணலில் இப்படத்தில் தனது பங்களிப்பு குறித்தும், சினிமாவில் கலைஞராக தன்னைப் பற்றிய பார்வைகள் குறித்தும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி அவர் பேசுகையில், "என்னை ஒரு பாடலுக்காக கூலி படத்தில் நடனமாட அழைத்ததற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அவர் என்னை அழைத்தது, அந்தப் பாடல் படத்தின் வணிக வெற்றிக்கு முக்கியமான பங்கு வகிக்குமென நம்பியதால் தான். இதற்காக அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. ஆனால், மோனிகா பாடலுக்கான நடனம் மிகவும் கடினமானதாக இருந்தது. இந்த பாடலுக்காக நான் கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், பாலிவுட் சினிமாவில் தன்னை மாறுபட்ட ரீதியில் பார்க்கும் ஒரு நிலையை குற்றம்சாட்டிய பூஜா ஹெக்டே, அதனை பற்றியும் கூறியிருக்கிறார். அதன்படி, "இந்தி சினிமாவில் என்னை வெறும் அழகு சேர்க்கும் கதாப்பாத்திரங்களுக்காக மட்டுமே தேர்வு செய்கிறார்கள். ஆனால், நான் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்துள்ள படங்களை அவர்கள் கவனித்திருக்கவே இல்லை என்று நினைக்கிறேன்.. அதற்கு எடுத்துக்காட்டாக, தமிழ் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அவர் இயக்கிய ரெட்ரோ திரைப்படத்தில் 'ருக்மிணி' என்ற கதாபாத்திரத்தில் என்னை நடிப்புத்திறன் கொண்ட நடிகையாக காட்சிப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. அவர் என் மீது வைத்த நம்பிக்கையை வாழ்நாள் முழுவதும் மதிப்பேன்.. மறக்கமாட்டேன்" என்றார். "மோனிகா" பாடல், வெளியாகி சில மணிநேரங்களிலேயே யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: "மோனிகா" பாடலுக்கு பூஜா ஹெக்டே அணிந்த ட்ரெஸ் இவ்வளவு காஸ்லியா..! அரண்டுபோன நெட்டிசன்கள்..!
பூஜாவின் ஸ்டைல், எணர்ஜி மற்றும் நடனபாங்கு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த பாடலில் ரஜினிகாந்துடன் ஸ்கிரீன் ஷேரிங் செய்வது பூஜாவுக்கு ஒரு முக்கிய அனுபவமாக இருந்ததென கூறியுள்ளார். தற்போது, "கூலி" படத்துக்கான எதிர்பார்ப்பு மிகைப்படுத்தலல்ல என்று சொல்லலாம். ரஜினி மீண்டும் ஒரு முறை மாஸ் அவதாரத்தில் திரும்பும் இந்தப் படத்தில், பூஜா ஹெக்டேவின் மின்னும் நடனமும், அனிருத் இசையமைத்த பாடல்களும், லோகேஷ் கனகராஜின் இயக்கப்பாங்கும் சேர்ந்து ஒரு பண்டிகை மயமான திரை அனுபவமாக உருவாகும் என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். "கூலி" திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெற்றியைக் கொண்டாட தயாராகும் திரையுலகமும், ரசிகர்களும்,அதற்கும் முன்னதாக பங்கேற்றுள்ள பூஜா ஹெக்டேவின் திறமைக்கும் சமூக வலைதளங்களில் ஆதரவு வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: விஜய் தான் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார்.. அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை – பூஜா ஹெக்டே பளிச் பேச்சு..!