×
 

விஜய் தான் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார்.. அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை – பூஜா ஹெக்டே பளிச் பேச்சு..!

நடிகை பூஜா ஹெக்டே விஜய் தான் சூப்பர் ஸ்டார் என பகிரங்கமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக நீண்ட காலமாக ரசிகர்களின் இதயத்தில் ரஜினி மற்றும் கமல் ஹாசன் ஆகியோருக்கு அடுத்த படியாக நிலைத்து இருப்பவர் தளபதி விஜய் மட்டும் தான். சமீபத்தில் இவர் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் அவரது திரையுலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே, ஒரு பேட்டியில் விஜய் உடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.

இதனை குறித்து பூஜா ஹெக்டே கூறுகையில், "விஜய் சார் உடன் பணியாற்றுவது என்பது ரொம்ப ரிலாக்ஸ்டான அனுபவம். அவர் எப்போதும் ஒரு சூப்பர்ஸ்டார் என்று அவருக்கே தெரியும். ஆனால் அதை நிரூபிக்க அவர் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. அவர் மிகவும் சாதாரணமான மனிதர், மிகவும் ஸ்வீட் ஆனவர். ஒரு பெரிய நடிகர் என்ற அந்தஸ்துடன் இருந்தாலும் கூட, செட்டில் அவர் காட்டும் அன்பு, அவருடைய அணுகுமுறை பாராட்டத்தக்கது. எங்களுடன் எப்போதும் நட்புடன் நடந்து கொள்வார். எந்தவொரு அழுத்தமும் இல்லாமல், மகிழ்ச்சியாக வேலை செய்வதற்கான சூழலை அவர் உருவாக்குவார்" என்று தெரிவித்துள்ளார். 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஷூட்டிங் காலத்தை நினைவுகூரும் பூஜா ஹெக்டே, விஜய்யுடன் ஒரே ஷாட்களில் நடிக்கும் போது கிடைத்த அனுபவம் தனக்கு மிக முக்கியமானது என்றும், அவர் ஒரு நடிகராக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் மிகப்பெரும் நேர்மையானவர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

விஜய் திரையுலகை விட்டு அரசியலுக்கு செல்வதைப் பற்றியும், பூஜா தனது பார்வையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன்படி அவர் தொடர்ந்து பேசுகையில், "இப்போது அவர் இன்னும் பெரிய கனவுகளை பின் தொடர்கிறார். அந்தக் கனவுகளை நிறைவேற்ற அவர் அதிகமான தூரம் செல்ல வேண்டும். நாங்கள் அனைவரும் அவருக்காக வாழ்த்து தெரிவிக்கிறோம். அவர் அரசியலுக்குச் செல்லும் முடிவை நான் முழுமையாக புரிந்து கொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்யும் மனநிலை கொண்டவர் அவர்" என தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். விஜயின் அரசியல் வருகை குறித்து கடந்த சில மாதங்களாகவே திரையுலகிலும், அரசியல்வட்டத்திலும் பரபரப்பான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகத்திலுள்ள சக நட்சத்திரங்களும் அவரது புதிய பயணத்திற்கு தொடர்ந்து உற்சாகத்தையும் ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: "மோனிகா" பாடலுக்கு பூஜா ஹெக்டே அணிந்த ட்ரெஸ் இவ்வளவு காஸ்லியா..! அரண்டுபோன நெட்டிசன்கள்..!

பூஜா ஹெக்டே, அவருடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து பேசுவது, ஒரு நடிகராக விஜய்க்கு கிடைக்கும் மரியாதையை மீண்டும் ஒரு முறை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது. 'ஜனநாயகன்' படம் விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கலாம் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், விஜய் அரசியலில் புதிய பாதையைத் தொடங்கும் இந்த கட்டத்தில், அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அவரின் சமூகப் பொறுப்புணர்வு பற்றி ஏராளமான பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் இடம்பெற்று வருகின்றன. தற்போது, பூஜா ஹெக்டே பேட்டியில் கூறிய இந்த வார்த்தைகள், விஜய் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு மனிதராகவும் எவ்வளவு உயர்ந்த நற்பண்புகளுடன் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. அவரது அரசியல் பயணத்தில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த பூஜா, “அவர் செல்லும் பாதையில் வெற்றி கிடைக்கவேண்டும். அவர் மீது அனைவருக்கும் பெரும் நம்பிக்கை உள்ளது” எனவும் உருக்கமாகக் கூறியிருக்கிறார்.

இந்த பேட்டியின் மூலம், விஜயின் கடைசி திரைப்பட அனுபவம், அவரது நடத்தை, பணிவும், சமூக சேவையின் நோக்கமும் பேசப்படும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்பட்டுள்ளன. அவரது புதிய பயணத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் கிடைக்கும் ஆதரவு, அவரது அரசியல் வருகையை இன்னும் வலிமையாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: இந்த டேன்ஸ் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..! பூஜா ஹெக்டே வெளியிட்ட "மோனிகா" பாடல் வீடியோ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share