×
 

‘எஸ்டிஆர் 49’ பட அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்..! டீசரே இப்படின்னா படம் எப்படி இருக்கும்..!

நடிகர் சிலம்பரசனின்  ‘எஸ்டிஆர் 49’ பட அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட நடிகராகவும், வளர்ச்சியடையும் இயக்குநராகவும் திகழும் STR என்கின்ற சிலம்பரசன், தனது சமீபத்திய திரைப்படமான ‘தக் லைஃப்’ பட வெற்றியை தொடர்ந்து, தற்போது இன்னொரு முக்கியமான படைப்பில் நடிக்க உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய படம், மறைமுகமாக வெற்றிமாறனின் வடசென்னை பட உலகத்தை விரிவுபடுத்தும் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாகி வருகிறது.

இப்-படத்தை இயக்குவது தமிழ் சினிமாவின் அட்டகாசமான இயக்குநராக கருதப்படும் வெற்றிமாறன் என்பதாலேயே, இதற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. 'வடசென்னை' திரைப்படம் அடுத்தடுத்த பாகங்களாக உருவாகும் என்ற தகவல்களும் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது உருவாகி வரும் இந்த படம், வடசென்னை கதையின் தொடர்ச்சி படம் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் சிலம்பரசன் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஒரு இளம் பருவக் காலத்து வீரராகவும், பிறகு வயது முதிர்ந்த ஒரு கட்டத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரமாகவும் அவர் காணப்படுவார் என கூறப்படுகிறது. இது அவருடைய நடிப்புத்திறனை மெருகூட்டும் வகையிலும், ரசிகர்களுக்கு தனி அனுபவமாகவும் அமையப்போகிறது. வெற்றிமாறனின் இந்த புதிய படத்தில், வடசென்னை திரைப்படத்தில் நடித்த முக்கியமான சில நடிகர்கள் மீண்டும் இணைந்து நடிக்க இருகின்றனர் என்பது ஒரு சிறப்பு அம்சமாகும். குறிப்பாக, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

இது ரசிகர்களிடையே ஒரு நெகிழ்ச்சியும், தொடர்ந்து வடசென்னை கதையின் பரப்பை விரிவாக்கும் ஒரு முயற்சியுமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சமூகக் கேள்விகளை கேட்கும் வெற்றிமாறன் படங்களுக்கு என்றைக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு, இப்போது மீண்டும் ஒருமுறை ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து செல்லத் தயார் நிலையில் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் சென்னையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இந்த தொடக்கத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சிம்புவின் தோற்றம் மற்றும் படத்தின் சூழ்நிலை குறித்து ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாக்கி உள்ளது. இந்த புகைப்படங்களில் காணப்படும் லொக்கேஷன்கள் மற்றும் காஸ்ட்யூம்கள், படத்தில் நடக்கும் பாழாக்கப்பட்ட வாழ்க்கை முறைகளை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதைக் காட்டுகின்றன.

இதையும் படிங்க: எதிர்மறை விமர்சனங்களுக்கு கடும் பதிலடி..! நடிகை 'அனுசுயா பரத்வாஜ்' பேச்சால் கலக்கத்தில் இணையவாசிகள்..!

சிம்பு நடித்து வரும் இந்த புதிய திரைப்படம் தற்காலிகமாக ‘STR 49’ என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் படத்தின் நிதி சிக்கல்கள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்த படுகிறது என வதந்திகள் பரவின. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, படம் திட்டமிட்டபடி நகர்கிறது. முக்கியமாக, ரசிகர்களுக்காக இந்த படத்தின் டீசர்  வீடியோ ஆகஸ்ட் மாதம் 2வது அல்லது 3வது வாரத்தில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டீசர் வீடியோவை முன்னிட்டு, படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பும், சிம்புவின் முழு தோற்றமும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த படம் குறித்த தெளிவான கதைநகர்வு ரசிகர்களுக்குக் கிடைக்கும். தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் என்றாலே கதையின் அடிப்படை ஆழமும், சமூகப் பின்னணியும் தான். STR என்றாலே, பரபரப்பு, ஸ்டைல், அட்டகாசமான நடிப்பு என எல்லாவற்றிற்கும் ரசிகர்கள் காத்திருப்பார்கள். இவர்கள் இருவரும் முதன் முறையாக ஒரே படம் மூலம் இணைகின்றனர் என்பது, சினிமா ரசிகர்களுக்கு ஒரு "ட்ரீம் காம்போவாக" இருக்கிறது. எனவே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இது வெறும் ஒரு "கமர்ஷியல் எண்டர்டெயினர்" அல்ல. வெற்றிமாறனின் கதையமைப்பும், STR-ன் நடிப்பும் சேரும் போது, அது ஒரு விசாரணை சினிமா அல்லது நேர்மையான சமூக குற்றம் பின்னணியான படம் ஆக உருவாகும் வாய்ப்பு அதிகம். மொத்தத்தில் ‘STR 49’ தமிழ்ச் சினிமாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையூட்டும் ஒரு பரிசாக உருவாகியுள்ளது.

சிம்பு தனது நடிப்புத்திறனையும், இயக்குநர் வெற்றிமாறன் தனது கதை சொல்லும் வல்லமையையும் இணைத்து வழங்கும் இந்த திரைப்படம், தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களின் பட்டியலில் இடம்பிடிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.மேலும் அக்டோபர் அல்லது நவம்பர் மாத வெளியீட்டுக்கான அடித்தளங்கள் போடப்பட்டுள்ள நிலையில், 'STR 49' ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்ச் சினிமாவிற்கே ஒரு முக்கிய நிகழ்வாக அமையப் போகிறது.

இதையும் படிங்க: "மோனிகா" பாடலுக்கு பூஜா ஹெக்டே அணிந்த ட்ரெஸ் இவ்வளவு காஸ்லியா..! அரண்டுபோன நெட்டிசன்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share