×
 

'கூலி' பட ப்ரமோஷன் விழாவால் தள்ளிப்போன 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்..! 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' கிளிம்ஸ் வீடியோ வெளியீடு 'கூலி' பட ப்ரமோஷன் விழாவால் தள்ளிப்போனது.

தமிழ் சினிமாவில் தனிச்சிறப்பான காதல் மற்றும் காமெடி மாறுபட்ட கதைகளால் ரசிகர்களிடம் தனித்த அடையாளம் கொண்டு இருப்பவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். அவர் இயக்கும் புதிய திரைப்படம் தான் ‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’. இப்படம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து உருவாக்கிய 'ரௌடி பிக்சர்ஸ்' மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

முன்னணி நட்சத்திரங்கள் கலந்த நகைச்சுவை காதல் கலவையான படம் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலுடன் உள்ளனர். இந்தப் படத்தில் 'லவ் டுடே' திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே. சூர்யா, சீமான் போன்ற திறமையான நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் பங்களிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கும் இந்தப் படத்திற்கு ஏற்கனவே ரசிகர்களிடையே ஆர்வம் உருவாகி உள்ளது.

திரைப்படத்தின் கதை, சாதாரண காதல் கதையாக இல்லாமல், எதிர்காலத்தில் நடக்கும் கற்பனைச் சூழலாக அமைந்துள்ளது. முக்கியமாக, தனது காதலை வெல்ல கதாநாயகன் டைம் டிராவல் செய்து எதிர்காலத்திற்கு பயணம் செய்யும் தனிச்சிறப்பான கதைக் களத்தை கொண்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் காலா காலமாக வலியுறுத்தப்படும் காதலுக்கே புதிய கோணத்தை தருவதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை இன்று வெளியிடத் திட்டமிட்டிருந்த படக்குழு, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதால், 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' படத்தின் கிளிம்ப்ஸை ஒரு சில நாட்களுக்கு தள்ளி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பிரச்சனையா.. எங்களுக்கா.. நெவர்..!! தனது ஸ்டைலில் 'நச்' பதில் கொடுத்த நயன்தாரா..!

ஆகவே புதிய வீடியோ வெளியீட்டு தேதி விரைவில் படக்குழு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணி என்பது, காதல் மற்றும் நகைச்சுவை மாறுபட்ட சினிமா ரசிகர்களுக்குப் பெரிய க்ளூவாக உள்ளது. அதிலும், அனிருத் இசை, பிரபல நட்சத்திரங்கள், டைம் டிராவல் மற்றும் காதல் என்ற புதிய கலவையின் மூலம் படம் நினைத்ததை விட மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' திரைப்படம், உயர்தர படப்பிடிப்பு, அதிநவீன VFX தொழில்நுட்பம், மற்றும் சிறந்த ப்ரொடக்‌ஷன் வால்யூ கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆகவே 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி'படம்  காதலுக்காக எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் பயணத்துக்கு நம்மை அழைத்து செல்லும் என்பது உறுதி.

இதையும் படிங்க: ரூ.50 கோடியை கடந்த விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’..! இன்று எங்கு வெளியாகிறது தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share