×
 

படம் என்னுது நடிப்பு உன்னுது..! ஆட்டத்தை ஆரம்பித்த நடிகர் விஜயின் மகன்..! 

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்கும் நடிகர் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் பல வருடங்கள் சினிமா துறையில் இருந்து ஆதிக்கம் செலுத்தி வந்தவர். இன்று ஒரு படத்திற்கு அசால்ட்டாக ரூ.100 கோடியை சம்பளமாக பெரும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர். இப்படி இருக்க, தற்பொழுது அரசியலிலும் குதித்து, தனக்கென ஒரு அரசியல் பட்டாளத்தையே உருவாக்கி, எல்லா இடங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் விஜயின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட சிறிது நாட்களே இருப்பதால், சினிமா ரசிகர்கள் சற்று சோகத்தில் தான் இருக்கின்றனர். ஆனாலும் கற்பனை கதாபாத்திரங்களில் தலைவராக வரும் நடிகர் விஜய், இனி நிஜ உலகில் மக்களுக்கு தலைவராக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகவும் கூறி வருகின்றனர்.

நடிகர் விஜய் சினிமா துறையில் இருந்து விலகும் நேரத்தில், அவரது மகன் ஜேசன் சஞ்சய், சினிமா துறையில் தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் நடிகர் விஜயின் மகன் படத்தில் நடிக்கப் போகிறார் என அனைவரும் காத்தருந்த நிலையில், தற்பொழுது படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை ஆனால், படத்தை இயக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறி, லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சந்திப் கிஷன் நடிப்பில் பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார் ஜேசன் சஞ்சய். இந்த செய்திகள் காட்டு தீயாய் தமிழகம் முழுவதும் பரவ, படத்திற்கான அப்டேட்டை எப்பொழுது தருவார் எனக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: தனது படம் சக்ஸஸ் ஆகணுமாம்..! அதுக்காக ராகவா லாரன்ஸ் செஞ்சத பாருங்க..!

இந்த செய்திகள் ரசிகர்கள் மட்டுமல்லாது, நடிகர் அஜித்தின் காதுகளிலும் விழ, உடனே ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமல்லாது லைக்கா ஏதாவது குளறுபடி செய்தாலோ அல்லது தயாரிக்க முன் வராமல் இருந்தாலோ என்னிடம் சொல்லுங்கள். நீங்கள் இயக்கும் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று பேசியதாகவும் கூறப்படுகிறது. அதற்கும் காரணம் உண்டு எப்படி எனில் ஜேசன் சஞ்சய் தீவிரமான அஜித் ரசிகர் என்பது தான். 

இந்த நிலையில், ராட்சசி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திறமாக வலம் வந்த கமலேஷ் தற்பொழுது வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி என்ற  படத்திலும் முள்ளி என்கின்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். இந்த சூழலில், சமீபத்தில் தனியார் சேனலுக்கு கமலேஷ் அளித்த பேட்டி ஒன்றில், தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அந்த பட வரிசையில் முதலில் இருப்பது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிவரும் அவருடைய முதல் படம் தான் அதில் கமலேஷ் நடித்து வருவதாகவும். அனைவரது எதிர்பார்ப்பில் இருக்கும் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் இந்த பிரமாண்ட படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார் என்ற நிலையில் காமேலேஷும் இருப்பது மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: நடிகர் அஜித்தா இப்படி செய்தது... நம்பவே முடியல..! மகனை ஜெயிக்க வைக்க என்ன செய்தார் AK..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share