என்னை போல் தயவு செய்து நடிக்காதே.. ப்ளீஸ்..! நடிகர் சஞ்சீவை பங்கமாக கலாய்த்த விஜய்..!
நடிகர் விஜய் தனது ஆருயிர் நண்பனான நடிகர் சஞ்சீவுக்கு விஜய் அட்வைஸ் கொடுத்ததாக அவரே கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் இன்று வரை தனது இடத்தை உறுதியாக தக்க வைத்திருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவர் தற்பொழுது சினிமாவை இருந்து முற்றிலும் விலகி அரசியலை நோக்கி தன் பயணத்தை தீவிரமாக தொடங்கி களத்தில் இறங்கி போராடி வருகிறார். இப்படி அவரது அதிரடி ஆக்ஷன்களை பார்க்கும் ரசிகர்கள் முதல் அரசியலறிஞர்கள், ஊடகங்கள், என அனைவரும் அரசியல் எதிர்பார்ப்பில் அவரது அடுத்த கட்டநகர்வு குறித்து தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவர் தொடங்கியுள்ள 'தமிழக வெற்றிக் கழகம்' இன்று பல உறுப்பினர்களையும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களையும் கொண்ட வலுப்பெற்ற கட்சியாக இருக்கிறது. இந்த நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரும், சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் வெங்கட் பார்க்கும் இடங்களில் எல்லாம் பேச்சிலும் நடிப்பிலும் நடவடிக்கை என அனைத்திலும் தனது நண்பனா விஜயை பிரதிபலிப்பார் என்பது உலகத்திற்கே தெரிந்த உண்மை. இப்படி இருக்க, தனது சமீபத்திய பேட்டியில், விஜய் குறித்து உணர்ச்சிபூர்வமான சில தகவல்களை பகிர்ந்துள்ளார் சஞ்சீவ். அதில், சஞ்சீவ், விஜய் இருவரும் நீண்ட கால நண்பர்கள். இவர்களின் நட்பு பள்ளி காலத்தில் ஆரம்பமாகி இன்றுவரை தொடர்கிறது என்பது பற்றியும் விஜய் சமீபத்தில் தனக்கு கொடுத்த அட்வைஸை பற்றியும் சஞ்சீவ் தனது பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி அவர் பேசுகையில், "ஒரு நாள் விஜய் என்னிடம் சிரித்தபடி ஒருவிஷயத்தை சொன்னார் – ‘டேய், நீ தினமும் டீவியில் வருகிறாய். ஆனால் அங்கு என்னை போல நடித்து கொண்டு இருக்கிறாய். டயலாக் பேசும்போதும் கூட அதே இடத்தில் என்னைப்போல் நிறுத்தி பேசுகிறாய். அப்புறம் நான் உன்ன மாதிரி பண்றேனா, இல்ல நீ என்னை போல செய்கிராய்யா என்று எனக்கே சந்தேகம் வந்துரும். நான் ஆறு மாதங்களுக்கு ஒரு வாட்டி தான் ஸ்க்ரீனில் வருவேன். ஆனால் நீ அப்படி அல்ல என்று நகைச்சுவையாக சொன்னார். ஆனால் அதில் ஒரு உண்மை உண்டு. நான் வேண்டுமென்றே அவ்வாறு நடிப்பதில்லை. அது எனக்குள்ளேயே இருக்கும் பாதிப்பு. எதுவும் திட்டமிட்டு செய்வதில்லை. விஜயுடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட அந்த அனுபவங்களே இன்று என் நடிப்பில் தெரியக்கூடிய அதே பாணியை வெளிப்படுத்தி காட்ட வைக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரசிகர்களை குழப்பும் விஜய்.. அரசியல் சும்மா.. சினிமா தான் மெயின்..! தளபதியின் பிளானை புட்டுப்புட்டு வைத்த நடிகை..!
விஜய் தற்போது தனது அரசியல் அமைப்பின் மூலம் அரசியலுக்கு தீவிரமாக முன்வந்து வருகிறார். சமீபத்தில் நடந்த கூட்டங்களில் அவர் பல முக்கியமான கருத்துகளை எடுத்துரைத்துள்ளார். அவரது கட்சி நம்மை எதிர்காலத்தில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வாய்ப்பு அதிகம் என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல், சஞ்சீவ் கூறும் அந்த நட்பு தருணங்கள், ஒரே நேரத்தில் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. இந்நிலையில், சினிமாவிலும், அரசியலிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்த தயாராக உள்ள விஜய், எப்போது தனது கட்சியின் சார்பில் அரசியல் களத்தில் முழுமையாக களமிறங்குவார் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதேசமயம், அவரது சினிமா ரசிகர்கள் அவரை மீண்டும் ஒரு மாஸ் ஹீரோவாக திரையில் காண ஆசைப்படுகின்றனர்.
இது இரண்டும் இணைந்தால்தான், 'தளபதி'யின் அரசியல் பயணமும், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஒரே நேரத்தில் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் நடிகர் சஞ்சீவ் விஜய் பேசியதை வெளிப்படையாக பொதுவெளியில் பேசியது பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 'எனது காதலன் எப்படி இருக்கனும் தெரியுமா'..! நடிகை ஹனிரோஸ் பேச்சால் மகிழ்ச்சியில் இளசுகள்..!