காதலை அறிவித்த விஷால் - சாய் தன்ஷிகா! வைரலாகும் ரொமான்டிக் போட்டோஸ்!
நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா ஆகியோர் தங்களின் காதலை அறிவித்த நிலையில், தற்போது இவர்களின் ரீசென்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் விஷால்.
இவரின் தந்தை தயாரிப்பாளர். ஹீரோவாக நடிக்கும் முன்பே தெலுங்கு திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார்.
இதையும் படிங்க: விஷாலுக்கு கிடைத்த பெண் தேவதை..! அழகிய நடிகையை கரம்பிடிக்க போகிறார் ஆக்ஷன் ஹீரோ..!
பின்னர், திரைப்பட இயக்குனராகும் ஆசையில் சில படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார். மின்னலே படத்தில் எதேர்ச்சியாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு விஷாலுக்கு கிடைத்தது.
ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க அதிகம் யோசித்த விஷால் பின்னர் ஹீரோவாக மாறினார். இந்த படத்திற்கு பின்னர் விஷால் தேர்வு செய்து நடித்த, தாமிரபரணி, சண்டக்கோழி போன்ற படங்கள் சுப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இளம் ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவை தெறிக்கவிட்ட விஷால்... நடிகர் சங்கத்தில் தற்போது செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
அதே போல் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சினிமாவை தாண்டி, அரசியலிலும் விஷாலுக்கு ஆர்வம் உள்ளது என்பது ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட இவர் மனு தாக்கல் செய்தபோதே தெரிந்துக் கொள்ள முடித்தது.
நடிப்பிலும் - தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வரும் விஷால் ஒருவழியாக கூடிய விரைவில் திருமணம் செய்துக்கொள்ள உள்ள தகவலை அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக, விஷால் மற்றும் தன்ஷிகா இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், தற்போது சாய் தன்ஷிகா தன்னுடைய பட விஷாலின் இந்த காதல் விஷயத்தை ஓப்பன் செய்துள்ளார்.
தற்போது இந்த தகவலை சொல்ல நினைக்க வில்லை என்றும், ஆனால் இந்த விவகாரம் செய்திகளில் வெளியாக துவங்கிவிட்டது. இனி எதையும் உங்களிடம் மறைக்க முடியாது. நீங்கள் எங்கள் குடும்பம் என கூறி விஷாலை காதலிக்கும் தகவலை கூறினார்.
இருவருமே 15 வருடமாக நல்ல நண்பர்கள். சமீபத்தில் தான் இருவரும் பேச துவங்கினோம். அது அப்படியே லவ் ட்ராக்கில் சென்று விட்டது. எனவே ஆகஸ்ட் 29-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என கூறினார்.
47 வயதில், திருமணம் செய்து கொள்ள உள்ள நடிகர் விஷாலுக்கு இப்போது வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதே போல் இந்த இளம் காதல் ஜோடி பத்திரிகையாளர்களுக்கு முன்பு கியூட்டாக முத்தம் கொடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: காதலில் விழுந்த விஷால்.. சாய் தன்ஷிகாவோடு டும் டும் டும்..! எப்போ தெரியுமா..?