வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
சினிமா

அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா தான்.. விஷயம் அறிந்து சண்டைக்கு போன நயன்.. உண்மையை உடைத்த செய்யாறு பாலு!

குஷ்பூவை தொடர்ந்து நயன்தாராவின் பட்டம் தொடர்பான கேள்விகளுக்கு சாட்டை பதில் கொடுத்து இருக்கிறார் செய்யாறு பாலு.

நடிகை நயன்தாரா இனி தன்னை யாரும் 'லேடி சூப்பர் ஸ்டார்" என அழைக்க வேண்டாம் என்று லெட்டர் பேடு மூலமாக மக்களுக்கு தகவலை கொடுத்தார். இதனை பலர் ஏற்றுக்கொண்டாலும், சிலர், முதலில் உங்களுக்கு யார் அப்படி ஒரு பட்டம் கொடுத்தார்கள், இதனை நீங்களாகவே உங்கள் படத்தில் வைத்து கொண்ட பட்டம் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, தற்பொழுது "டெஸ்ட்" என்ற திரைப்படத்தில் மாதவன், சித்தார்துடன் இணைத்து நடித்து இருக்கிறார் நயன்தாரா. இப்படம் தியேட்டரில் வெளியிடப்படாமல் நேரடியாக, ஏப்ரல் 4ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் கொதித்து போய் உள்ளனர். 

இது ஒருபுறம் இருக்க, நயன்தாராவின் ஃப்ரொடக்ஷனான ரவுடி பிக்சர்ஸ், மற்றும் சுந்தர்.சி.யின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து, ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் "மூக்குத்தி அம்மன்-2"யை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதனை உறுதி படுத்தும் வகையில்,சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக இப்படத்தின் பூஜைகள் நடைபெற்றது. இந்த படத்திற்காக, காண்பவர்களை பிரமிக்க வைக்கும் அளவிற்கு உண்மையான கோயில் போன்ற பெரிய கோயில் செட் அமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பாத்ரூம் கழுவி நடிகையை நடிக்க வைத்த இயக்குநர்.. எத்தனை பேருக்கு தெரியும் இந்த சம்பவம்…!

படம் எடுப்பதற்கு முன்பாகவே தனது மகன்களுடன் ஒரு மாதகாலமாக விரதம் எடுத்து வரும் நயன்தாரா, பயபக்தியின் உச்சத்துக்கே சென்று இப்படப்பிடிப்புக்கான பூஜைக்கு சிவப்பு நிற புடவையில் வந்து அம்மனாகவே காட்சியளித்தார். பின் படத்திற்கான பூஜைகள் நல்ல படியாக நிறைவு பெற்றது.

இந்த நிலையில், மூக்குத்தி அம்மன்-2கான பூஜையில் கலந்து கொண்ட நடிகை குஷ்பூவிடம் நயன்தாரா "லேடி சூப்பர் ஸ்டார் பட்டம்" குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "நயன்தாரா எடுத்த முடிவு மிகவும் சரியானது என்றும் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை, எங்கள் காலத்தில் யாருக்கும் பட்டம் கொடுத்து நாங்கள் பார்த்ததும் இல்லை. இன்று வரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான். மற்ற யாருக்கும் அந்த பட்டம் கொடுக்காமல் அவரவர் பெயரை வைத்து அழைத்தால் நன்றாக இருக்கும்" என்று கூறி இருந்தார்.

தற்பொழுது அவரை தொடர்ந்து, 'செய்யாறு பாலு' நயன்தாரா குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில்,"நயன்தாராவை முதலில் யார் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து. அவரே தனக்கான பட்டத்தை தேர்ந்தெடுத்து போட்டு கொள்வாராம், பின் அவரே நீக்குவார்களாம், இது என்ன சாக்லேட் கதையாக உள்ளது. உங்களுக்கு தெரியுமா…? தமிழ் சினிமாவில் இதற்கு முன்னர் லேடி சூப்பர் ஸ்டார் என்று யாரை கேட்டாலும் அனைவரும் கூறுவது நடிகை விஜயசாந்தியை தான். காரணம், மன்னன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்தார், அதற்காகவே தனது பெயரை டைட்டில் கார்டில் "லேடி சூப்பர் ஸ்டார்" என போட வேண்டும் என்று இயக்குநர் வாசுவை தொல்லை செய்தார். ஆனால் வாசுவோ இதை மறுக்க, பிரச்சனை பூதாகாரமானது, பின்னர் இந்த பிரச்சனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலையிட்டு, இப்படத்தில் தனது பெயருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடாமல் டைட்டில் கார்டை வையுங்கள் என சொல்லி பிரச்சனையை முடித்து வைத்தார். அந்த அளவிற்கு ரஜினிக்கே சவால் விட்ட ஒரே பெண் என்றால் அது விஜயசாந்தி தான்.

இப்படி இருக்க, இங்கு நயன்தாராவை யாருமே "லேடி சூப்பர் ஸ்டார்" என அழைக்கவில்லையே. எதை நினைத்து நயன்தாரா, தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று கூறுகிறார் என எனக்கும் விளங்கவில்லை, ரசிகர்களுக்கும் விளங்கவில்லை. இவராகவே தான் தனது பெயரை "லேடி சூப்பர் ஸ்டார்" என படங்களில்  போட்டுள்ளார். அவர் இதை மறுப்பாரானால், அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது, இயக்குநரிடம் தனது பெயருக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" என போட வேண்டும் என்று சண்டைபோட்டார். பிறகு தான் சரி,போடுகிறோம் என்று சொன்ன பின்னர் தான் டைட்டிலையே போட விட்டாராம், இதை அவரால் மறுக்க முடியுமா.

சரி, படத்திற்காக இவ்வளவு சண்டை போட்ட நயன்தாரா எதற்காக இந்த பட்டம் வேண்டாம் என்று முடிவெடுத்தார்? என விசாரித்தால் அப்பொழுது தான் உண்மையே தெரியவந்தது. நடிகை அனுஷ்கா நடிப்பில் "காட்டி" என்கிற படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த படத்தின் டைட்டில் கார்டில் அனுஷ்காவுக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" என பட்டம் சூட்டப்படவுள்ளது. இந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட நயன்தாரா, இது தொடர்பாக படக்குழுவினரிடம், லேடி சூப்பர் ஸ்டார் என அனுஷ்காவுக்கு போடக்கூடாது எனக் கூறியுள்ளார்.

அதற்கு அவர்களோ, நீங்கள் தமிழுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்றால், அனுஷ்கா தெலுங்கிற்கு லேடி சூப்பர் ஸ்டார், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது, நாங்கள் கட்டாயம் அனுஷ்காவுக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை போடுவோம் எனக் கூறியுள்ளார்கள். இப்படி, அனுஷ்கா லேடி சூப்பர் ஸ்டார் என பட்டம் வாங்கினால் நம்முடைய மவுசு குறைந்து விடும் என்பதற்காக அஜித்தை போல், ரசிகர்களே நிங்கள் இனி என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என கூறி சமாளித்து இருக்கிறார் நயன்தாரா" என ஆவேசமாக கூறியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், உண்மையில் இந்த பட்டம் அனுஷ்காவிற்கு சொந்தமான பட்டம் தான், லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டாக பட்டம் அவர் கைக்கு வந்துள்ளது என கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: தென்னிந்தியா சினிமா இன்றும் மாறவில்லை.. பெண்கள் என்ன கிள்ளுக்கீரையா.. ஜோதிகா ஆவேசம்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी