வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தங்கம் மற்றும் வெள்ளி

தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை..!! பெண்கள் ஹேப்பியோ ஹேப்பி..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்திருப்பது நகைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்க நகைகள் இந்திய பெண்களின் இதயத்தில் என்றும் சிறப்பான இடம் பிடித்தவை. பாரம்பரிய மதிப்பு மற்றும் நவீன ஃபேஷனின் கலவையாக, தங்க நகைகள் பெண்களின் அழகை மிளிரச் செய்யும் முக்கிய அணிகலனாக உள்ளன. தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் தங்களின் தனித்துவமான பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தங்க நகைகளை விரும்புகின்றனர். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இதையும் படிங்க: அப்படியே யூடர்ன் போட்ட தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா..??

தங்கம் விலை நிலவரம் (16/05/2026):

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறங்குமுகத்தில் தான் உள்ளது. இந்த விலை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் ஏற்றம் இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரம் இறங்குமுகத்தில் தான் தொடங்கியது. வாரத்தின் முதல் குறைந்த தங்கம் விலை, அதன் பின் அதிரடியாக உயரத் தொடங்கியது. ஆனால் நேற்று காலை, மாலை என இரண்டு முறை குறைந்த நிலையில், இன்றும் (சனிக்கிழமை) விலை சற்று குறைந்துள்ளது. இது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ.1,28,728க்கும், கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.16,091-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிகரித்துகொண்டே வந்த தங்கம் விலை தற்போது குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு சற்று மகிழ்ச்சி அளிக்கிறது. 

வெள்ளி விலை நிலவரம்:   

தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கும், கிலோவிற்கு ரூ.15,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இப்படியே விலை குறைந்து வந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தலைகீழாக மாறிய தங்கம் விலை..!! ட்விஸ்ட் கொடுத்த வெள்ளி..!! இன்றைய நிலவரம் என்ன..??

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी