வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தங்கம் மற்றும் வெள்ளி ›

வரலாறு காணாத உச்சம்; 66 அயிரத்தைக் கடந்தது தங்கம் விலை – காரணம் என்ன? 

இன்று மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இன்று மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,250 ரூபாய்க்கும், சவரன் 66,000 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம் (19/03/2024): 

இன்றைய நிலவரப்படி, (புதன்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 290 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து 66 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இதையும் படிங்க: அடிச்சது ஜாக்பாட்… ஏறிய வேகத்தில் சரசரவென சரிந்த தங்கம் விலை… ஒரே நாளில் இவ்வளவு குறைவா? 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 43 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 043 ரூபாய்க்கும், சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 344 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் அதிகரித்து 114 ரூபாய்க்கும், கிலோவிற்கு 1000 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததும், போர் பற்றிய கவலைகளும் முதலீட்டாளர்களை பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் மீதான விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது. 

இதையும் படிங்க: இன்று ஒரே நாளில் 2 முறை இடியாய் இறங்கிய தங்கம் விலை… மாலையிலும் மளமளவென உயர்வு…! 

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी