வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தங்கம் மற்றும் வெள்ளி

என்ன மக்களே ரெடியா..? தொடர் சரிவில் தங்கம் விலை.. ஆனா வெள்ளி ரேட்..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திங்கட்கிழமையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது. இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் (10/06/2025): 

இன்றைய நிலவரப்படி, (செவ்வாய்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 945 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இதையும் படிங்க: தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை.. ஆனால் எகிறிய வெள்ளி விலை..!

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 758 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.88 குறைந்து 78 ஆயிரத்து 064 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 119 ரூபாய்க்கும், கிலோவிற்கு ரூ.1,000 அதிகரித்து ஒரு லட்சத்து 19 ஆயிரம்  ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.

 
 

இதையும் படிங்க: ரூ.73 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी