வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தங்கம் மற்றும் வெள்ளி

தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை.. ஆனால் எகிறிய வெள்ளி விலை..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,130 ரூபாய்க்கும், சவரன் 73,040 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: ரூ.73 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

தங்கம் விலை நிலவரம் (06/06/2025): 

இன்றைய நிலவரப்படி, (வெள்ளிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் 9 ஆயிரத்து 130 ரூபாய்க்கும், சவரன் 73 ஆயிரத்து 040 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 9 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், சவரன் 79 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை மாறாத நிலையில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து, 117 ரூபாய்க்கும், கிலோவிற்கு ரூ.3,000 அதிகரித்து ஒரு லட்சத்து 17 ஆயிரம்  ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆபரணத் தங்கம் விலை சற்று உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी