வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தங்கம் மற்றும் வெள்ளி

Gold Rate Chennai: ஒரே நாளில் இப்படி உல்ட்டா ஆகிடுச்சே… நடுத்தர மக்களை நடுங்க வைக்கும் தங்கம் விலை! 

என்றாவது ஒருநாள் சற்றே குறைந்தாலும் மறுநாளே இருமடங்காக உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில் நேற்று கணிசமான அளவு குறைந்த தங்கம் விலை ஒரே நாளில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது

இந்தியர்களை பொறுத்தவரை, தங்கம் என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பின் விஷயமாகும். எனவே, தங்க விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் எப்போதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

புத்தாண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. என்றாவது ஒருநாள் சற்றே குறைந்தாலும் மறுநாளே இருமடங்காக உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில் நேற்று கணிசமான அளவு குறைந்த தங்கம் விலை ஒரே நாளில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 

தங்கம் விலை: 

சென்னையில் இன்று (செவ்வாய் கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 105 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 810 ரூபாய்க்கும், சவரனுக்கு 840 ரூபாய் அதிகரித்து 62 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இதையும் படிங்க: Gold Rate In Chennai: ஒரே நாளில் இவ்வளவு சரிவா? – சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை! 

அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 115 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், சவரனுக்கு 920  ரூபாய் அதிகரித்து 68 ஆயிரம் 160  ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை: 

தங்கத்தைப் போல் அல்லாமல் வெள்ளி விலை இன்று சற்றே குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 106 ரூபாய்க்கும், கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

தங்கம் விலை உயரக் காரணம் என்ன? 

அமெரிக்க அரசாங்கத்தின் கட்டணக் கொள்கைகள், குறிப்பாக சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீதானவை, பணவீக்கமாகக் கருதப்படுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பாக மாற்றுகிறார்கள். இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதும் தங்கத்தின் விலை உயர மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: வாரத்தின் கடைசி நாளில் இப்படியா?… இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை! 

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी