வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தங்கம் மற்றும் வெள்ளி

தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம் விலை.. கலக்கத்தில் நகைப்பிரியர்கள்..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் செல்வது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நகைகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள். 

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சமீபகாலமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் உள்ளது. 70 ஆயிரம் ரூபாயை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் தங்கம் வாங்க வேண்டும் என்ற கனவையே இந்த விலையேற்றம் கலைத்து விடுகிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைந்தது.

இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரன் இவ்ளோ உயர்வா..!!

தங்கம் விலை நிலவரம் (21/07/2025):

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வந்த தங்கம் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்கிழமை) மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.73,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.73 ஆயிரத்திற்கு கீழ் இறங்கிய தங்கம் விலை, தற்போது மீண்டும் ரூ.73 ஆயிரத்தை தாண்டியுள்ளது இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ஒரு கிராம் 10 ஆயிரத்து 015 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.88 அதிகரித்து ஒரு சவரன் 80 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.126க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 

 

இதையும் படிங்க: படிப்படியாக ஏறும் தங்கம் விலை.. கலக்கத்தில் நகைப்பிரியர்கள்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी