ஆரம்பகட்ட சக்கரை அளவை ஏறாமல் எப்படி பார்த்துக் கொள்வது?
உங்களுக்கு HBA1C அளவு 5.7 முதல் 6.4 ஆக சக்கரை அளவு இருக்கா, ஆரம்ப கட்ட சக்கரை நோயை உணவு முறைகளில் செய்யும் மாற்றங்களில் எளிதில் குணப்படுத்தலாம். எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சக்கரை நோய் வந்தாலே இட்லிக்கு பதிலா சப்பாத்தி சாப்பிடுங்க, அப்படியே இட்லி எடுத்துக்கிட்டா இரண்டோட நிறுத்திக்கோங்க, சோறு சாப்பிடாதீங்க, நிறைய காய்கறிகள் சாப்பிடுங்க னு அறிவுரை கூற ஆட்கள் குறைவில்லாமல் இருப்பர்.சக்கரை நோய் உள்ளவர்களுக்கு மாவு சத்தை உடல் முழுவதுமாக உரியும் தன்மை கம்மியாவதால் அது ரத்தத்தில் கலந்து மேலும் சக்கரை அளவை அதிகரிக்கிறது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்தால் நாம் எளிதாக சரி செய்து கொள்ள முடியும் என அமெரிக்கா ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பகட்ட சக்கரை நோய் உள்ளவர்கள் புரதங்களை அதிகப்படுத்தி மாவு சத்தை கம்மியா சாப்பிட்டால் சக்கரை அளவு ஏறவிடாமல் கட்டுக்குள் இருக்கும் என்பது அந்த கண்டுபிடிப்பு. அதேசமயம் கொழுப்புகளை குறைக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
மாவு சத்து - 50 %
புரதம் - 25 %
நல்ல கொழுப்புகள் - 25%
எனவே நாம் உணவு உண்ணும் தட்டில் மேற்கூறிய சதவீதத்தில் உணவுகள் இருக்கும் அளவுக்கு அமைத்துக் கொள்வது அவசியம். இது ஆராய்ச்சி மூலமாக நிரூபிக்கப்பட்டதால் இந்த முறை உணவுகள் எடுத்துக் கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
இதையும் படிங்க: கொத்தமல்லி இலை, விதை எது நல்லது? குழப்பம் வேண்டாம்
காலையில் நாம் சாப்பிடும் நான்கு இட்லிக்கு பதிலாக இரண்டு இட்லியை குறைத்து. கூடுதலாக இரண்டு முட்டைகளை சேர்த்து வரலாம். நான்கு தோசைக்கு பதிலா இரண்டு முட்டை சேர்த்து முட்டை தோசையாக இரண்டு சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள நல்ல கொழுப்பு நிறைந்த தேங்காய் சட்டினி, அல்லது வேர்க்கடலை சட்டினி தொட்டு சாப்பிடலாம்.
மதியம் ஒரு பிளேட் முழுக்க ரைஸ் எடுப்பீர்கள் என்றால், அதனை ஒரு கப் பாரம்பரிய சிறுதானிய சோறாக அளவை குறைத்துக்கொண்டு, 2 முட்டையோ அல்லது 100கிராம் அளவுக்கு கொழுப்புகள் இல்லாத சிக்கன் அல்லது மீன் எடுத்துக் கொள்ளலாம். சைவ பிரியர்கள் சிக்கனுக்கு பதிலாக 100 கிராம் பன்னீர் அல்லது மஷ்ரூம் எடுத்துக்கொள்ளலாம். சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு வேகவைத்த சுண்டல், பருப்புவகைகளின் அளவை கூட்டிக்கொள்ளலாம்.
மாலை நேரத்தில் பஜ்ஜி, போண்டா, பிஸ்கட் வகை ஸ்நாக்ஸ்களை தவிர்த்து வேகவைத்த சுண்டல் ஒரு கப் அல்லது நட்ஸ் வகைகளான பாதாம், நிலக்கடலை சாப்பிடலாம். டீ , காப்பியை தவிர்த்து லெமன் டீ குடிப்பதும் கூட மிகவும் நல்லது.
இரவு நேரத்தில் இட்லி, தோசை, சப்பாத்தி எதை சாப்பிட்டாலும் அதன் அளவை பாதியாக குறைத்துக் கொண்டு புரத உணவுகளான ஒரு முட்டை அல்லது ஒரு மீன் அல்லது சிக்கன் துண்டுகளை சேர்த்து சாப்பிட்டு வருவது சக்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
இந்தமுறை உணவுமுறை ஆரம்ப கட்ட சக்கரை நோயாளிகளுக்கு HBA1C அளவு 5.7 முதல் 6.4 வரை உள்ளவர்கள் கடைபிடித்து வந்தால் சக்கரை அளவை ஏற விடாமல் கட்டுக்குள் வைக்க உதவும்.
இதையும் படிங்க: ஆவாரம் பூவில் இத்தனை நன்மைகளா? - எப்படி பயன்படுத்தலாம்