வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

’டிரஸைக் கழட்டுங்க’ பள்ளி சென்று திரும்பிய சிறுவர், சிறுமிகளை மிரட்டி ஆபாச புகைப்படம் – இருவரை புரட்டி எடுத்த பொதுமக்கள்…!

உசிலம்பட்டி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த 5 சிறுமிகள், 2 சிறுவர்கள் என 7 பேரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியதாக இருவரை பிடித்து கிராம மக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.குளத்துப்பட்டியில் தோட்டத்து வீட்டில் வசிக்கும் 5 சிறுமிகள், 2 சிறுவர்கள் இன்று மாலை உள்ளூரில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த மூன்று பேர் சிறுமிகள், சிறுவர்களை மறித்து, ஆடைகளை கலையச் சொல்லி ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்தாகவும், வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நாயுடன் நிர்வாண கோலம்… பிறப்புறுப்பில் பீர் பாட்டிலை சொருகிய காமுகன் கைது..!

இது குறித்து சிறுவர், சிறுமிகள் வீட்டிற்கு வந்து தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மீண்டும் அதே வழியாக வந்த லிங்கப்பநாயக்கணூரைச் சேர்ந்த பழனி, அலெக்ஸ்பாண்டி என்ற இருவரை பிடித்து உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்த செல்போனுடன் தப்பி சென்ற லிங்கப்பநாயக்கணூரைச் சேர்ந்த ரவி என்பவரை தேடி வருகின்றனர்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமிகள், சிறுவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிஞ்சு குழந்தைன்னு கூட பார்க்கலையே.. 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी