தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய தவெக எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேர விவகாரத்தில் இதுவரை இதுவரை திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன் மற்றும் அசோக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன் ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
அடுத்தகட்டமாக, இந்த மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. காவல் விசாரணைக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது, பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்த தகவல்களையும், அவர்களிடமிருந்து விரிவான வாக்குமூலங்களையும் பெற காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த விவகாரத்தில் முழு உண்மையையும் வெளியே கொண்டு வர வேண்டுமெனில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கைது செய்ய வேண்டும் என்பதில் காவல்துறை முனைப்பு காட்டி வருகிறது. தற்போது அசோக்குமார் கடந்த 20ம் தேதி முதலே தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை தேடிப்பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வைகோ கைதா?... சி.எம். விஜய் மீது எஃப்.ஐ. ஆரா? - திமுகவில் இருந்து வந்த கலகக்குரல்...!
இதனிடையே, தவெக ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரம் நடத்தியதாக எழுந்த புகாரில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 3 பேர், கரூரில் 2 பேர், நாமக்கல்லில் ஒருவர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த செல்வன், ஸ்ரீனிவாசன், ராஜேஷ் ஆகியோர் பெங்களூவில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கைதான 5 பேரில் திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான 2 பேரிடம் தீவிர விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களான கார்த்திக், ரமேஷ் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்த போலீசார், திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “இப்ப தும்முனா சரியா இருக்கும்...” - கூட்டணி கட்சிகளுக்கு கொக்கி போடும் விஜய்... பின்னணி என்ன தெரியுமா?