தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், இன்று முதல் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்குகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில், சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக திமுக சார்பில் அண்ணா நகர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ எம்.கே. மோகன் மகன் கார்த்திக் மோகன் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா, அரசியல் உத்தியாளராக அறியப்படுபவர். முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக விலகிய பின்னர், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். த.வெ.கவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், சென்னைப் பகுதியில் கட்சியின் செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!
நேற்றைய தினம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்தார். வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டு விடுவார் என்று அறிவித்தார். இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் நிலையில் வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையும் படிங்க: காப்பி அடிச்சது ADMK தான்... திமுக ஆட்சியில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றம்... கனிமொழி MP பிரஸ்மீட்..!!