சுகுணா சிக்கன் எனப்படும் இந்த நிறுவனம் கோழி பண்ணை தொடர்பாக இந்த தொழிலை நடத்தி வருகிறது. கோவையைத் தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்லாது வங்கதேசம், கென்யா, இலங்கையில் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இவற்றின் நிறுவனங்கள் என்பது விரிவடைந்து இருக்கிறது. முக்கியமாக கடந்த சில ஆண்டுகளாக இவர்களது வருமானத்திற்கும், இந்நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி கணக்கிற்கும் பொருத்தமில்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த காரணத்தினால் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் அவர்களுக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை என்பது நடத்தப்படுகிறது. குறிப்பாக ஈரோடு, உடுமலைப்பேட்டை, கோயம்பத்தூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் எல்லாம் இந்த சோதனை என்பது நடைபெற்று வருகிறது. தலைமை அலுவலகம், இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் அவர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை என்பது நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் 6 மணி முதல் சோதனையானது நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்டும் இந்த நிறுவனம் தொடர்ந்து பல்வேறு விதமான தொழில்களை துவங்கி இருக்கின்றன. அதாவது டெய்லி ஃப்ரெஷ் என்ற பெயரில் சில்லறை விற்பனை நிலையங்களை துவங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் பல இடங்களில் அவுட்லெட் ஆரம்பித்து கோழி இறைச்சி விற்பனையை ஆரம்பித்திருக்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆயிரம் விற்பனை கடைகளை கொண்டு வர வேண்டும் என்ற இலக்குடன் தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று மதர் டிலைட் என்ற பெயரில் சோயாபீன் எண்ணெய் உற்பத்தியிலும் இந்நிறுவனம் இறங்கியுள்ளது.
இதையும் படிங்க: கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு? - கோவை, நெல்லை, கன்னியாகுமரி போத்தீஸ் கடைகளிலும் ஐ.டி. ரெய்டு...!
ஆனால் இந்த தொழில்கள் அனைத்துமே அவர்களுக்கு முதலீடாக பெற்ற பணம் என்பது கேள்விக்குறியாகவே இருந்திருக்கிறது. அதற்குண்டான முதலீடுகள் எங்கே இருக்கிறது என்பது குறித்து வருமான வரிக் கணக்கு காட்டவில்லை என்பது இந்த சோதனை மூலமாகவும், அதிகாரிகள் நடத்திய விசாரணை மூலமாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக நஷ்டக்கணக்கு காட்டி இருக்கிறார்கள். இதனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வர்த்தகம் என்பது எப்படி அவர்கள் செய்திருக்கிறார்கள் என்ற ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நஷ்ட கணக்கு காட்டி குறைந்த அளவில் வருமான வரி செலுத்தி மோசடி செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டு பல்வேறு விதமான உண்மைகள் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வருமானவரித்துறையினர் சோதனையில் ரொக்கம், தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள் உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரி ஏய்ப்பு செய்த பணத்தைக் கொண்டு தங்கம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சோதனை என்பது இன்றுமட்டுமல்லாது நாளையும் தொடரும் எனவும், முழுமையான சோதனைக்கு பிறகு பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், தங்கம் மற்றும் சொத்து முதலீடுகள் குறித்த முழு தகவல்கள் வெளியாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: “என் தொகுதி நிதியில் கட்டுனதை நீ எப்படி திறப்ப?” - ரேஷன் கடை திறப்பு விழாவில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம்...!