• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உயரதிகாரிகளுடன் திடீர் மீட்டிங்.. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் போட்ட உத்தரவுகள் என்னென்ன..?

    விசாரணை கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது என்று ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
    Author By Editor Wed, 02 Jul 2025 18:46:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    adgp-davidson-devasirvatham-orders

    நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக மானாமதுரை குற்றப்பிரிவு சிறப்பு படை போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் என்ற இளைஞர் விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் 44 காயங்கள், உட்பட தலையில் மற்றும் மார்பில் காயங்கள், மிளகாய்ப் பொடி பயன்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளிட்டவை மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

    இந்நிலையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது எனில் அதுதான் அதிகமாக பொதுமக்கள் மத்தியில் பரவுகிறது. அது போல ஏதும் பதிவிடப்பட்டிருந்தால் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் உண்மை தன்மை குறித்து மீடியாவில் பேட்டியாக கொடுக்கலாம் மேலும், State Fact Team-க்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை கண்டிறிய வேண்டும். அது பொய் செய்தியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது Legal opinion பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். 

    இதேபோல் காவல் நிலையத்துக்கு யாரும் புகார் அளிக்க வந்தால் உடனடியாக FIR / CSR கொடுக்க வேண்டும். அதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது. காவல் நிலையத்தில் இதற்காகவே தான் RECEPTIONIST நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் எந்த ஒரு தங்கு தடையும் இருக்கக் கூடாது. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் பேப்பர் இல்லை பேப்பர் வாங்கிட்டு வா என்றோ, அதிகாரி இல்லை என்று சொல்லி அலைக்கழிக்கவோ திருப்பி அனுப்பவோ கூடாது. ஏதாவது பாதுகாப்பு அலுவல் என்றால் காவல் நிலையத்திலிருந்து காவலர்களை மொத்தமாக எடுக்கக்கூடாது. தேவை இல்லாமல் அதிகமான காவலர்கள் ஒரே இடத்தில் நியமிக்க கூடாது  

    இதையும் படிங்க: மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருச்செந்தூர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு..!

    adgp

    பாதுகாப்பு பணிகள் குறித்து Proper Assessment வேண்டும். அதை பொறுத்து தான் பாதுகாப்பு பணிக்கு காவலர்களை நியமிக்க வேண்டும். எவ்வளவு Bandobust இருந்தாலும் ஸ்டேஷன்ல Minimum Strength இருக்க வேண்டும். அதாவது Light Station என்றால் 5 காவலர்களும், Medium Station என்றால் 10 காவலர்களுக்கு குறையாமலும், Heavy Station என்றால் 15 காவலர்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஸ்டேஷன் காலியாக ஆக இருக்க கூடாது.

    சோசியல் மீடியாவில் காவல்துறைக்கோ அரசுக்கு எதிராகவோ, அரசின் திட்டங்களுக்கு எதிராகவோ, தவறான பதிவுகளை யாரும் பதிவு செய்திருப்பின் அப்பதிவின் மீது சரியான சட்ட கருத்துரை பெற்று சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்கள் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் யாரேனும் அபாயகரமான ஆயுதங்கள் வைத்துக்கொண்டோ அல்லது பைக் ஸ்டண்ட் செய்தோ ரீல்ஸ் போன்ற பதிவுகள் செய்யக்கூடாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது. அப்படி பதிவு செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவில்களில் சாமி கும்பிடுவது, திருவிழா நடத்துவது, போன்ற நிகழ்வுகளில் சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறினார். 

    தொடர்ந்து Drive against Drugs போதை பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுகள் நடத்தப்பட வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்க வேண்டும். முக்கிய பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நியமித்தலை தவிர்க்க வேண்டும். முக்கிய பாதுகாப்பு பணிகளுக்கு முன்கூட்டியே Mirror தயார் செய்ய வேண்டும். அதில் காவலர்கள், பெண் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படையினர் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு தகுந்த பயிற்சி கொடுக்க வேண்டும் தேவையில்லாமல் லத்தியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    adgp

    யாரையேனும் கைது செய்யும்போது பொதுமக்களுக்கு தெரியும் அளவிற்கு செய்யாமலும், அதன் முலம் ஏதாவது பிரச்சனை ஏற்படும் அளவிற்கு உள்ளதாகவும் இருக்கக் கூடாது. தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து கைது செய்ய வேண்டும். அதனை பிரபலப்படுத்தும் அளவிற்கு இருக்கக் கூடாது. அதன் முலம் ஏதும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    முடிந்த அளவிற்கு பெண் காவலர்கள் தாங்கள் வசிக்கும் சொந்த ஊரிலேயே பணி மாறுதல் வழங்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற பெண் காவலர்கள்களுக்கு அவர்கள் கேட்கும் இடத்திற்கே பணி மாறுதல் வழங்க வேண்டும். சட்ட ஒழுங்கு பிரிவில் பணிபுரிவதற்கு தகுந்த துணை காவல் கண்காணிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்து உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் சரியாகப் பணி புரியாத துணை காவல் கண்காணிப்பாளர்களை பணி மாறுதல் செய்ய இருப்பின் அவர்களின் பட்டியல்களையும் தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

    வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக திருட்டு குற்றங்களில் கொள்ளை, கூட்டுக் கொள்ளை, ஆதாய கொலை போன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும், அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அத்தகைய குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    காவல்துறையில் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும், உயர்நிலையில் உள்ள காவல் அதிகாரிகள் இதை பின்பற்றினால் மட்டுமே கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் காவலர்களை கட்டுப்படுத்த முடியும். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமுக விரோதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும். அதிகப்படியான தடுப்புகாவல் சட்டத்தில் வைக்க முயற்சிகளை எடுக்க வேண்டும்.

    adgp

    அதிகாரிகள் எப்பொழுதும் தன் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் Defensive Methodல் இருக்கக்கூடாது Offensive Method-ல் இருக்க வேண்டும். பணிபுரியும் காவலர்கள் ஏதேனும் தவறு செய்யும்போது அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலர்கள் மற்றும் காவல்துறை வாகனங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

    Custody Death அல்லது Custody Violence இருக்க கூடாது. காவல் நிலையங்களில் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் எதுவும் இருக்கக் கூடாது. காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும். வாகன தணிக்கையின் போது கவனமாக செயல்பட வேண்டும் தேவையில்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது. குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் Harrasment-ல் ஈடுபடக்கூடாது.

    கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் போன்றவைகளின் புழக்கம் எந்த மாவட்டத்திலும் இருக்கக் கூடாது இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். CCTV கேமராக்கள் அதிக எண்ணிக்கையில் பொருத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை வளர்க்கவும் மேம்படுத்தவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கலப்புத் திருமணம், காதல் விவகாரங்கள் போன்றவைகளில் காவல்துறையினர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. திருட்டு வழக்குகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். முழுமையான Recovery என்ற பெயரில் விசாரணை கைதிகளை துன்புறுத்தல் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் காவல்துறை உயரதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. 

    இதையும் படிங்க: அணுசக்தி ஒத்துழைப்பு இடைநிறுத்தம்! புது பேரழிவை நோக்கி நகர்கிறதா ஈரான்? உலக நாடுகள் அச்சம்..!

    மேலும் படிங்க
    மாசம் ரூ.4 லட்சம் கொடுக்க சொன்ன நீதிமன்றம்.. அதெல்லாம் போதாது.. ஷமியின் மனைவி ஹாசின் அதிரடி!!

    மாசம் ரூ.4 லட்சம் கொடுக்க சொன்ன நீதிமன்றம்.. அதெல்லாம் போதாது.. ஷமியின் மனைவி ஹாசின் அதிரடி!!

    கிரிக்கெட்
    கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை.. முட்புதரில் கிடந்த சடலம்.. நடந்தது என்ன..?

    கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை.. முட்புதரில் கிடந்த சடலம்.. நடந்தது என்ன..?

    குற்றம்
    திருப்புவனம் அஜித்குமார் மரணத்தில் ட்வீஸ்ட்.. புகாரளித்தவர் மீது குவியும் மோசடி வழக்கு.. யார் அந்த நிகிதா?

    திருப்புவனம் அஜித்குமார் மரணத்தில் ட்வீஸ்ட்.. புகாரளித்தவர் மீது குவியும் மோசடி வழக்கு.. யார் அந்த நிகிதா?

    தமிழ்நாடு
    அடிக்க பாய்ந்த முதல்வர்.. அதிகாரி எடுத்த ஆக்‌ஷன்.. சிக்கிய சித்தராமையாவை பொளந்துகட்டும் பாஜக..!

    அடிக்க பாய்ந்த முதல்வர்.. அதிகாரி எடுத்த ஆக்‌ஷன்.. சிக்கிய சித்தராமையாவை பொளந்துகட்டும் பாஜக..!

    இந்தியா
    திருமணமான 10 நாளில் சோகம்.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா விபத்தில் பலி..!

    திருமணமான 10 நாளில் சோகம்.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா விபத்தில் பலி..!

    கால்பந்து
    செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்... ஐகோர்ட்டில் சரண்டர் ஆன தமிழ்நாடு அரசு...!

    செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்... ஐகோர்ட்டில் சரண்டர் ஆன தமிழ்நாடு அரசு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாசம் ரூ.4 லட்சம் கொடுக்க சொன்ன நீதிமன்றம்.. அதெல்லாம் போதாது.. ஷமியின் மனைவி ஹாசின் அதிரடி!!

    மாசம் ரூ.4 லட்சம் கொடுக்க சொன்ன நீதிமன்றம்.. அதெல்லாம் போதாது.. ஷமியின் மனைவி ஹாசின் அதிரடி!!

    கிரிக்கெட்
    கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை.. முட்புதரில் கிடந்த சடலம்.. நடந்தது என்ன..?

    கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை.. முட்புதரில் கிடந்த சடலம்.. நடந்தது என்ன..?

    குற்றம்
    திருப்புவனம் அஜித்குமார் மரணத்தில் ட்வீஸ்ட்.. புகாரளித்தவர் மீது குவியும் மோசடி வழக்கு.. யார் அந்த நிகிதா?

    திருப்புவனம் அஜித்குமார் மரணத்தில் ட்வீஸ்ட்.. புகாரளித்தவர் மீது குவியும் மோசடி வழக்கு.. யார் அந்த நிகிதா?

    தமிழ்நாடு
    அடிக்க பாய்ந்த முதல்வர்.. அதிகாரி எடுத்த ஆக்‌ஷன்.. சிக்கிய சித்தராமையாவை பொளந்துகட்டும் பாஜக..!

    அடிக்க பாய்ந்த முதல்வர்.. அதிகாரி எடுத்த ஆக்‌ஷன்.. சிக்கிய சித்தராமையாவை பொளந்துகட்டும் பாஜக..!

    இந்தியா
    திருமணமான 10 நாளில் சோகம்.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா விபத்தில் பலி..!

    திருமணமான 10 நாளில் சோகம்.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா விபத்தில் பலி..!

    கால்பந்து
    செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்... ஐகோர்ட்டில் சரண்டர் ஆன தமிழ்நாடு அரசு...!

    செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்... ஐகோர்ட்டில் சரண்டர் ஆன தமிழ்நாடு அரசு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share