பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி உள்ள தகவல்களை சுட்டிக்காட்டி உள்ளது.
சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள் என்று கூறியுள்ளது. இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் அச்சத்துடன் போராடி வருகின்றனர் என்று கூறியுள்ளது.

இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு என்றும் வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது எனவும் சரமாரியாக கேட்டுள்ளது. தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா., தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது எனவும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: நாங்க STRONG... திமுக கூட்டணியில் தான் குழப்பம்... EPS தடாலடி..!!
வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்றும் கடும் கண்டனத்திற்குரியது கூறியது. பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் இனி DMK கோட்டை..! விருப்ப மனு கொடுத்து சூளுரைத்த பெண்..!!