இன்று தான் முட்டாள்கள் தினம். ஆனால் திமுக-வோ, மார்ச் 29 அன்றே மக்களை முட்டாள் ஆக ஆக்க நினைத்து தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுவிட்டது அதிமுக விமர்சனம் செய்துள்ளது. மக்களை ஏமாற்ற எப்படி டிசைன் டிசைனாக உருட்டியிருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா கேள்வி எழுப்பி உள்ளது. ஆண்ட ஐந்து வருடத்தில் இரண்டு லட்சம் பம்பு செட்டுகள் கூட முழுதாக கொடுக்க முடியாத இந்த
அல்வா அரசு, விவசாயிகளை ஏமாற்ற “இருபது லட்சம் இலவச பம்ப் செட்கள்” என்ற உருட்டு வாக்குறுதி அறிவிப்பு அளித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளது. நிர்வாகம் என்றால் முன்ன பின்ன எதாவது தெரிந்தால் தானே ஸ்டாலின் இதைப்பற்றி எல்லாம் யோசிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே “ஆக…” என வாசிக்கும் பொம்மையாக இருக்கும் இவர்களுக்கெல்லாம் விவசாயம் பற்றி, மின் மேலாண்மை பற்றி என்ன தெரியும் என சாடியுள்ளது. அடுத்து, இளைஞர்களை ஏமாற்ற, 1.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறி இருப்பதாகவும் ஏற்கனவே நீங்கள் அரசுப்பணிகளை நிரப்பிய லட்சணத்தை, TNPSC Group2 தேர்வு கூட நடத்த வக்கற்ற திமுக அரசு என்ற உண்மையை தமிழ்நாடே அறிந்த பின்பும், இப்படி ஒரு பொய்யை சொல்லி ஏமாற்ற திமுக-விற்கு வெட்கமாக இல்லையா எனவும் அதிமுக. கேட்டுள்ளது.
இதையும் படிங்க: 50 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்... ஸ்டன் ஆன தேர்தல் களம்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி...!
தொழில்துறையினரை ஏமாற்ற, 18 லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு, 120 பில்லியன் டாலர் பொருளாதாரம் என பொய் சொல்லி இருப்பதாகவும், இதுவரை வெளிநாடு இன்பச் சுற்றுலா சென்றதெல்லாம் போதாதாம். இன்னும் பல நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டுமாம் என்று விமர்சித்துள்ளது. மிகவும் Highlight-ஆக, தமிழக மகளிரை ஏமாற்ற தனது வரலாற்றுப் புகழ் “விஞ்ஞான ஊழலை” கையில் எடுத்துள்ளது திமுக என்றும் கூப்பன் வாக்குறுதியையும் சுட்டிக்காட்டி உள்ளது.
இதையும் படிங்க: மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!