சமீபத்தில் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது. தமிழ்நாடு மனிதவளத்துறை அமைச்சரர் சரத்குமார் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு வீடியோ பரவியது. இந்த வீடியோ பலரிடையே அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. பலர் இதை உண்மையென நம்பி பகிர்ந்தனர், சிலர் அரசியல் காரணங்களுக்காக இதை பயன்படுத்த முயன்றனர். ஆனால் அமைச்சர் சரத்குமார் இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து, தவறான பிரசாரம் என்று விளக்கம் அளித்தார்.
சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையது. அப்போது சரத்குமார் தனது குடும்பத்தினருடன் ஐபிஎல் போட்டியை நேரில் காண சென்னை அல்லது பிற மைதானத்திற்கு சென்றிருந்தார். வீடியோவில் அவர் மைதானத்தில் சொகுசு பெட்டியில் அமர்ந்திருக்கும் காட்சி தெரிகிறது. அவர் ஏதோ ஒரு பொருளை நொறுக்கி அல்லது பொடியாக்கும் செயல் போதைப்பொருள் உட்கொள்வது போல் தோன்றியது. இந்த காட்சியை சிலர் எடுத்து, “போதை மருந்து” என்று கூறி வீடியோ வேகமாக வைரலானது.

இந்த வீடியோ மீண்டும் தீயாய் பரவியதால் அமைச்சர் சரத்குமார் உடனடியாக விளக்கம் அளித்தார். தனது குடும்பத்தினருடன் ஒரு வீடியோ வெளியிட்ட அவர், “அது போதைப்பொருள் அல்ல, எனது குழந்தைக்கான மாத்திரையை நொறுக்கி கொடுத்தேன்” என்று தெரிவித்தார். குழந்தையின் உடல்நிலை சரியில்லாததால் மருந்து கொடுக்க வேண்டியிருந்தது. மைதானத்தில் இருந்தபோது அந்த செயலை செய்ததாகவும், அதை தவறாக சித்தரித்து வேண்டுமென்றே தவறான பிரசாரம் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: போதைப் பொருள் பயன்படுத்தினேனா.? வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத் விளக்கம்..??
ஆனால் பல்வேறு தரப்பினர் போதைப்பொருள்தான் அவர் பயன்படுத்தினார் என்ற குற்றம் சாட்டை வருகின்றனர். அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. அதில், இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது. உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன், செல்போன், ATM Card, 500 ரூபாய் நோட்டு ஆகியவை இருக்க வேண்டுமாம் என்று கூறியது. மாத்திரை உடைப்பது எல்லாம் எப்படி Thug Life Moment ஆகும்? அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்துடுங்க என்று கூறியு
ள்ளது.
இதையும் படிங்க: "அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்"..! EPS பங்கேற்பு... தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு..!!