அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த கட்சி அமைப்பு ரீதியான புதிய பொறுப்புகள், கட்சியில் எதிர்பாராத பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதேபோல், நத்தம் விஸ்வநாதனும் இந்தப் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளார். புதிய பொறுப்புகள் வழங்கப்பட்ட பல மூத்த நிர்வாகிகளும் இவற்றை ஏற்க விருப்பமில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவங்கள் அதிமுகவின் உள்கட்சி அரசியலில் தொடரும் பதற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்த விவகாரம் ஆகியவை பெரும் பிளவை ஏற்படுத்தின. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் பறிக்கப்பட்டன. பின்னர் மன்னிப்புக் கடிதங்கள் அளித்த பின்னர் சிலரை மீண்டும் கட்சியில் இணைத்தாலும், முன்பு வகித்த முக்கிய பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படவில்லை. இது அதிருப்தியைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த புதிய பொறுப்புகளில் எஸ்.பி. வேலுமணிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி, நத்தம் விஸ்வநாதனுக்கும் துணைப் பொதுச் செயலாளர் பதவி, தங்கமணி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் போன்ற பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்தப் பதவிகளை அதிருப்தி தரப்பினர் “அலங்காரப் பதவிகள்” என்று விமர்சித்தனர். முடிவெடுக்கும் அதிகாரமோ, நிர்வாக செல்வாக்கோ இல்லாத பதவிகளை ஏற்கத் தயாரில்லை என அவர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: துருப்புச்சீட்டான சொத்து குவிப்பு வழக்கு... தவெகவிற்கு அதிமுக மாஜிக்கள் தாவ இதுதான் காரணமா?... முக்கிய பிரமுகர் பகீர் குற்றச்சாட்டு...!
இந்த நிலையில், அதிமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்பி வேலுமணி விலகினார். பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அதிமுக தலைமைக்கு எஸ்பி வேலுமணி பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். அதிமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நத்தம் விஸ்வநாதனும் விலகினார். அதிமுகவில் புதிதாக பொறுப்பு கொடுக்கப்பட்ட பலரும் தங்களுக்கு இந்த பொறுப்பில் விருப்பம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளனர்.
இதையும் படிங்க: அரசியலின் அடுத்தடுத்த திருப்பங்கள்..! நாளை முதல் தவெக..! C.விஜயபாஸ்கரின் புதிய ரூட்... முக்கிய அறிவிப்பு..!