தமிழ்நாட்டின் அரசியல் களம் தற்போது மீண்டும் பரபரப்பான நிலையில் உள்ளது. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த பிறகு, அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைவது தொடர்பாக அதிமுக தரப்பில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது “குதிரை பேரம்” என்று அழைக்கப்படும் அரசியல் துரோகம் மற்றும் பணப் பரிமாற்றம் சம்பந்தப்பட்ட விவகாரமாக மாறியுள்ளது. இந்தச் சர்ச்சை தமிழ்நாட்டு அரசியலின் பாரம்பரிய எதிர்காலத்தை பாதிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த மூன்று முதல் நான்கு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த சம்பவங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தன. மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் ராஜினாமா செய்த உடனேயே தவெக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாகவும், சில சந்தர்ப்பங்களில் ராஜினாமா ஏற்கப்படுவதற்கு முன்பே இணைப்பு நடைபெற்றதாகவும் அதிமுக தரப்பு குற்றம் சாட்டுகிறது. இது 100 சதவீத குதிரை பேரம் என்று அதிமுக எம்பி இன்பதுரை உள்ளிட்ட தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
இதையும் படிங்க: "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை அதிமுக எம்எல்ஏ அக்ரிகிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்பி தனபால் ஆகியோர் சந்தித்தனர். தமிழக வெற்றி கழகத்தின் குதிரை பேரம் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுகவினர் முறையிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவினரின் ராஜினாமா உடனடியாக ஏற்கப்பட்டதை சுட்டிக்காட்டி ஆளுநரிடம் மனு அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினரை தங்கள் பக்கம் இழுக்க தமிழக வெற்றி கழகத்தினர் குதிரை வீரத்தில் ஈடுபட்டதாகவும் கடும் குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்திருப்பதாக தெரிகிறது. ஆளுநர் இந்த சம்பவத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் வலியுறுத்துகிறது அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!