வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்… அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

அதிமுக - பாஜக கட்சிகள் இன்று தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2023 செப்டம்பரில் அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியிருந்த நிலையில், 2025 ஏப்ரல் 11 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பின் மூலம் இரு கட்சிகளும் மீண்டும் இணைந்தன. இதன்படி, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டு, 2026 தேர்தலை சந்திக்க உள்ளது.

இந்த கூட்டணியின் முக்கிய நோக்கம் திமுக ஆட்சியை கவிழ்ப்பதாகும். இரு கட்சிகளும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டு எந்த இடத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது மீண்டும் இணைந்துள்ளதால், வாக்கு பங்கீடு மற்றும் கூட்டணி வலிமையை அதிகரிக்கும் நோக்கத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. பாஜக தரப்பில் 2024 தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் தொகுதிகளை கோரி வருகிறது.

பாஜக தரப்பு 30 தொகுதிகளுக்கு கீழ் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சில தகவல்களின்படி பாஜக 38 தொகுதிகள் வரை கேட்டுள்ளது. அதேநேரம் அதிமுக தரப்பு சுமார் 25 தொகுதிகளை மட்டுமே வழங்க தயாராக உள்ளதாக தெரிகிறது. 

இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்… திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு… அதிமுகவில் அடுத்த இடி…!

இந்த நிலையில், மதுரையில் இன்று இரவு அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரைக்கு வரும் பியூஸ் கோயலுடன், எஸ்.பி வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய பேச்சின் தொடர்ச்சியாக நாளை இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அறிவிப்பதற்கு முன்பாக தொகுதி பங்கிட்டை இறுதிச் செய்து அறிவிக்க அதிமுக திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்… அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்… அதிமுகவில் புது அத்தியாயம்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी