தமிழ்நாடு ›

நீதிமன்ற உத்தரவிற்கே சவால்… திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவை கண்டித்து தீர்மானம்…!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் உள்ள 'தீபத்தூண்' எனப்படும் உயரமான கோபுரத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்றுவது கோயில் நிர்வாகத்தின் நீண்டகால பாரம்பரியமாக உள்ளது. இது 1996, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் நீதிமன்றங்களால் அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்த தீபத்தூண் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகில் அமைந்துள்ளதால், சில இஸ்லாமிய அமைப்புகள் இது தங்கள் மத இடத்தை அவமதிப்பதாக எதிர்த்து வந்தன. 

மதுரையின் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீப ஏற்றம் போன்ற பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகளுக்காக அறியப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றம் தொடர்பான ஒரு சிறிய சர்ச்சை, மாநில அரசு, நீதிமன்றம், மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான மோதலாக மாறியது.

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணி எம்பிகள் இடம் கையெழுத்து பெறப்பட்டு திமுக எம்பிக்கள் சபாநாயகரிடம் தீர்மான நோட்டீசை வழங்கினர். இதற்கிடையில் இன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடக்கம்… இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்த அதிமுகவினர்..!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவிற்கே சவால் விடுவதா என திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேல் முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் அதிமுக தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற மக்களின் எண்ணத்தை அதிமுக பொதுக்குழு பிரதிபலிப்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: திமுக + தவெக ஷாக்…!! – அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்… அறிவாலயம் கோட்டையிலேயே ஓட்டையைப் போட்ட இபிஎஸ்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी