மதுரையிலிருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது.
ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்ற வாக்குறுதியுடன் தொடங்கிய இந்த அரசு, இந்த 100 நாட்களில் சந்தித்த சவால்களின் சாதித்தது என்ன? சருக்கியது என்ன? சாதித்தது விட சருக்கியது தான் அதிகம் என்பதுதான் தற்போதைய நிலையாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் மொத்த கடன் சுமை ரூபாய் 13.18 லட்சம் கோடி என நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டதின் அடிப்படையிலே, இதன் காரணமாக தவெக கொடுத்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள புதிய திட்டங்கள் தற்போது நமக்கு கிடைக்காது என்பதை
சமிக்கையாக கடன் சுமை இன்றைக்கு வெள்ளை அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: 5 லாக்கப் மரணங்கள், 300 படுகொலைகள்... விஜயின் 100 நாள் ஆட்சியை கொண்டாட்டத்தை காலி செய்த ஆர்.பி.உதயகுமார்...!
வருவாயை பெருக்குவதிலும், அரசு கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறது தவெக அரசு. அதனால் 100 நாட்களில் 22,000 கோடியை எந்த புதிய திட்டமும் இல்லாமல் கடன் வாங்கியிருக்கிறது.
குறுவை நெல் சாகுபடிக்கு ரூபாய் 135 கோடியை சிறப்பு தொகுப்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூபாய் 75,000 வரையிலான பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்புகள், இதோடு 3 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது ஆனால் விவசாயிகளிடம் இது குறித்து வரவேற்பு கிடைத்திருக்கிறதா என்றால், சந்தேகம் தான். அதிகபட்ச வரம்பு நிர்ணயம் இன்றி, விவசாயிகள் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாடு முழுவதும் போராட்ட வடிவில் தொடர்ந்து விவசாயிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தவெக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், 4.72 லட்சம் கோடிக்கான அறிக்கையாக நாம் அதை பார்க்க முடிந்தது. இதில் அம்மா ஆட்சியில், எடப்பாடியாரின் ஆட்சியில் மக்களிடத்தில் வரவேற்பை பெற்ற பல்வேறு திட்டங்கள் தொடர்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கு நாம் வரவேற்க வேண்டியதுதான். ஆனால் புதிய திட்டங்கள் ஏதும் இடம்பெறாதது மக்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறது,
குறிப்பாக பெண்களுக்கு 2,500 ரூபாய் திட்டத்திற்கு 30,000 கோடி தேவைப்படுகிறது.வரி கட்டணங்களை உயர்த்தாமல், வருவாயை பெருக்குவோம் என தவெகஅரசு கொள்கை முழக்கமிட்டு உறுதி அளித்துள்ள நிலையிலே, மின் கட்டண நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகள் மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டாஸ்மார்க் மற்றும் கனிமவளம் உள்ளிட்ட துறைகளிலிருந்து அரசுக்கு கூடுதல் வருவாயாக 15,000 கோடி ஈட்டுவதற்கான நடைமுறைகளை அறிவித்திருப்பது அதே பழைய நடைமுறைகளின் நீட்சியாகத்தான் பார்க்க முடிகிறது.
கடந்த 100 நாட்களிலே 1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1,21,788 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தவெக அரசு அறிவித்திருப்பதும், பழைய நடைமுறையாகத்தான் பார்க்கப்படுகிறது. முதலீடுகள் அறிவிப்பிலிருந்து செயலாக்கத்திற்கு எப்போது கொண்டுவரப்படுகிறதோ, அப்போதுதான் வேலைவாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிற கோடிக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற முடியும். அந்த நடவடிக்கையை தவெக அரசு எடுக்குமா, என மக்கள், இளைஞர்கள், ஜென்சி தலைமுறை எதிர்பார்த்து ஏமாற்றத்தில் உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு போதை பொருள் நடமாட்டத்தை நாம் சொல்லவே வேண்டாம். தினந்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் நடமாட்டம், செய்திகள் வராத நாளே இல்லை. சட்டம் ஒழுங்கு போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பது, பெண்களின் பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளில் இந்த 100 நாட்களில் இந்த அரசு சாதித்ததை விட சருக்கியது தான் அதிகம்.
தவெக அரசு தொடர்ந்து தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. , முதலில் மூன்று கையெழுத்து போட்டார் முதல்வர் விஜய் அதில் 200 யூனிட் மின்சாரம் ,சிங்கப்பெண் அதிரடி படை ,போதை பொருள் சிறப்பு தடுப்பு படை இந்த மூன்று அறிவிப்புகளும் தற்போது முழு பலனை மக்களுக்கு தந்ததா என்றால், மனசாட்சி தொட்டு சொல்லுவோம், இது நிச்சயமாக தடுமாறி தான் நிற்கிறது.
200 யூனிட் மின்சாரம் என்றாலும் சரி, சிங்கப்பெண் அதிரடி படை பெண்கள் பாதுகாப்பு கொடுக்கிற பாதுகாப்பு என்றாலும் சரி, போதை பொருள் நடமாட்டத்தை தடுக்கின்ற சிறப்பு போதை பொருள் அதிரடி படை என்றாலும் சரி, மூன்றுமே முழுமையான பலன்களை இன்னும் கொடுக்க தொடங்கவில்லை என்பதைத்தான் நாம் பார்க்க முடிகிறது.
இதில் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன? மக்களின் பாதுகாப்புதான் அரசின் முதன்மை கடமை .அதனால்தான் மத்திய அரசு ராணுவத்திற்கு பட்ஜெட்டில் அதிக நிதியை ஒதுக்கிறதுஆகவே மக்களின் பாதுகாப்புதான் அரசின் முதல் கடமை என்பதில் தவெக அரசு கொடுத்து வருகிற முக்கியத்துவத்தை நாம் பார்க்கிறபோது, அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்ற கூட்டணி கட்சிகள் இதுவரை முறையான கூட்டணியின் பெயர் அறிவிக்காமல் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வருவது அரசின் நிலைத்தன்மைக்கு, நிலையான அரசு என்று உறுதிபட சொல்வதற்கு தற்போது அந்த தயக்கம் நமக்கு தெரிகிறது.
ஏனென்றால் தற்போது சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு செய்வதன் வாயிலாக விதிமுறை மீறல்களும், அவை குறிப்பு நீக்கங்களும், சபாநாயகர் கொடுக்கிற உத்தரவுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.கூட்டணி கட்சிகளின் அமைச்சர்களும் கொள்கை அளவில் வேறுபடுகிறார்களா என்பதை நாம் பார்க்க முடிகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியாக உள்ளது .இங்கே காங்கிரஸ் அமைச்சரவையில் இருக்கிறார்கள். எவ்வளவு எளிமையான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது தமிழகத்திற்கு. ஆனால் இன்றைக்கு கூட்டணி கட்சிகள் அந்த ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா?
வாய் வழியாக பேசுகிறார்கள். ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது, என்று சொல்லுகிறார்கள். ஆனால் ஜூன் ஜூலைலே நமக்கு தண்ணி வரவில்லை, ஜூலை 12லே நாம் காவேரியை திறக்க முடியவில்லை. முதல்வர் முதன்முதலாக பொறுப்பேற்று காவேரியில் தண்ணீரை திறந்து விட முடியாத ஒரு துர்பாக்கியமான ஒரு நிலை ஏற்பட்டிருப்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டி இருக்கிறது.
இன்றைக்கு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசிடமிருந்து பெறுவதில். தவெக அரசு சாதித்துக் காட்டியிருக்கிறதா? இன்றைக்கு பேரிடர் மேலாண்மை நிதி என்பது ஆண்டுக்கு 2 முறை எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கிற போது நமக்கும் வந்துவிடும்.
ஆனால், மெட்ரோ ரயிலுக்கு திட்டம், கல்விக்கான நிதி, வளர்ச்சிக்கான நிதி, வறுமை ஒழிப்பதற்கான நிதி, மற்ற திட்டங்களுக்கான நிதி,யை இவையெல்லாம் பெற வேண்டும்
விஜய் சுதந்திரத்தின விழாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நாங்கள் மத்திய அரசோடு இணைந்து பயணிப்போம் என்று சொன்னார். அது வரவேற்கக் கூடியதாக பார்த்தாலும் கூட, சாதித்தது என்ன என்று பார்த்தால், அதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
இந்த அரசின் அச்சாணியாக இருக்கிற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வு திட்ட கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதிகளாக விஜய் கொடுத்ததை நினைவில் வைத்துக்கொண்டு, எப்போது நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல சத்துணவு ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கையும் தவெகஅரசு நிறைவேற்றுமா? என்று அவர்களும் ஒரு புறத்திலே கவலையோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மேகதாது அணை விவகாரம், காவேரி நீர் பெறுவதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் நமக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதை கவலையோடு நாம் கடந்து போக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்திலே நெற்களஞ்சியத்தில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இதை முறையாக சட்ட ரீதியாக அணுகி இருந்தால், இந்த 100 நாட்களில் ஒருவேளை நமக்கு சாதகமான நிலை ஏற்பட்டிருக்குமோ?
நம்முடைய அரசின் சட்ட வல்லுனர்களிடம் முறையான சட்ட ஆலோசனை பெறப்படுகிறதா? அல்லது சட்ட ஆலோசகர்கள் முறையான ஆலோசனை கொடுக்கிறார்களா என்பதுமே இந்த முரண்பாடுகளில் நமக்கு அது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. மொத்தத்தில நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட மாநில சுயாட்சியை தவெக அரசு எப்படி கையாளப் போகிறது என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
3 மாசத்துல 22,000 கோடி, ஒரு ஆண்டில் ஒரு லட்சத்துக்கு 22,000 கோடி கடன் வாங்கப்போறோம்னு சொல்றாங்க. இப்படி போனா 20 லட்சம் கோடி வந்துவிடும். நிதி சுமையை எப்படி சமாளிக்க போறாங்க? சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவது ,கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற சவால்களை தவெக அரசின் அணுகுமுறையால் எப்படி சமாளிக்க போகிறது.
இந்த அரசுக்கு சட்ட ஒழுங்கில் தோல்விதான் கிடைத்திருக்கிறது. சட்ட ஒழுங்கை நிலைநாட்ட இரும்பு கரம் கொண்டு அடக்க முடியாமல் தவெகஅரசு தடுமாறுகிறதை நாம் பார்க்கிறோம். ஆகவே தவெக அரசின் அணுகுமுறையால் தான் அடுத்தடுத்த வெற்றியை பெற முடியுமே தவிர இப்போது 100 நாட்களில் சாதித்ததாக சொல்வது வெற்று விளம்பரத்துக்கு வேண்டுமானால் நாம் ஏற்றுக்கொள்ளலாமே தவிர அது வெற்றியாக நாம் பார்க்க முடியாது.
ஆகவே தவெகஅரசின் பல்வேறு நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உள்ளாவது ,முரண்படுவது இதெல்லாம் இன்றைக்கு சவால்களாக அரசு முன் நிற்கிறது. ஒரு புதிய மாற்றம், புதிய முன்னேற்றம் ,தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வாய்ப்பாகத்தான் இந்த அரசை அரியணையில் அமர்த்தினார்கள். ஆனால் இந்த 100 நாட்களிலே சாதித்ததை விட சரிக்கியது தான் அதிகமாக நமக்கு இப்போது பட்டியலில் பார்க்க முடிகிறது.
இந்த அரசு சாதிக்க வேண்டும் தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் முதல்வர் அணுகுமுறையில் இன்றைக்கு கிடைத்திருக்கிற பலம் என்ன? வேலைவாய்ப்புக்கு எந்த உத்தரவாதம் இதுவரை கிடைக்கவில்லை. வளர்ச்சிக்கான அடித்தளமும் இன்னும் நாம் பார்க்க முடியவில்லை. மொத்தத்தில் 100 நாட்களில் விஜய் தலைமையிலான தவெக அரசு சாதித்ததை விட சரிக்கியது தான் அதிகம் என்பதைத்தான் மனசாட்சி உள்ள மனிதர்கள் இன்றைக்கு கவலையோடு பார்க்கிறார்கள் என கூறினார்.
இதையும் படிங்க: “அந்த விஷயத்துல எடப்பாடியார் தான் கெத்து...” - விஜய் மாஸ்டர் பிளானை மட்டையாக்கிய ஆர்.பி.உதயகுமார்...!