சென்னை அடையாறு ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட மூத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் திரு. கே. ராஜன் அவர்களின் அதிர்ச்சி மறைவுக்கு, அதிமுக பொதுச்செயலாளரும் மேனாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் பதிவு செய்துள்ளார்.
திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபரீதச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விடுத்துள்ள அதிகாரப்பூர்வ இரங்கல் செய்தி அறிக்கை பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு. கே. ராஜன் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன் எனத் தனது வேதனையைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதிலும், நலிவடைந்த தயாரிப்பாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதிலும் மிக முக்கியக் குரலாகவும், அரணாகவும் விளங்கியவர் திரு. கே. ராஜன் அவர்கள் என்று அவரது திரைத்துறைப் பங்களிப்பை எடப்பாடி பழனிசாமி நினைவு கூர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: "எங்களை நீக்கியது செல்லாது": எடப்பாடி பழனிசாமிக்கு சி.வி. சண்முகம் அதிரடி பதிலடி!

அதிர்ச்சி மரணத்தால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஒட்டுமொத்த திரைத் துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று அந்த அறிக்கையில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாத் துறையின் விவாத மேடைகளில் நலிந்த தயாரிப்பாளர்களுக்காக எப்போதும் ஆவேசக்குரல் கொடுக்கும் ஒரு மூத்த ஆளுமையின் மறைவுக்கு, தமிழகத்தின் முதன்மை எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள இந்த இரங்கல் செய்தி திரையுலகினர் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!