கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பயணிகள் உயிர் பயத்துடன் தற்போது பயணம் செய்திருக்கிறார்கள்.
கேரளாவில திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி நோக்கி சென்ற ஏறந்திய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு என்பது ஏற்பட்டதன் காரணமாக அந்த விமானமானது, சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிக்னல் கோளாறு காரணமாக சென்னையை நோக்கி திரும்பியதாக விமானி தெரிவித்திருக்கிறார். தரை இறங்குவதற்கு அனுமதி கேட்டு கிட்டத்தட்ட இரடு மணி நேரம் சென்னையில் விமானம் மட்டமடித்திருக்கிறது. முதல் முறையாக தரை இறங்க முயன்ற போது ஓடு பாதையில் மற்றொரு விமானம் இருந்ததாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். விமானியின் விரைவான முடிவால் ஏர் இந்தியா விமானம் மீண்டும் மேலே உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக சென்னையில் தரை இறங்கி இருக்கிறது. ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரமான பயணம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் எம்பி வேணுகோபால், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்.பி. வேணுகோபால், ஏர் இந்தியா விமானம் தரையிறுக்கும் போது ஓடுதளத்தில் மற்றொரு விமானம் வந்ததாகவும், விமானி துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் பயத்தை காட்டியதாக கூறியுள்ள வேணுகோபால், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருந்ததால் முன்னெச்சரிக்கையாக விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. மேலும் விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் வேறு எந்த விமானமும் வரவில்லை என்று குறிப்பிட்ட ஏர் இந்தியா, பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திமுகவில் ஐக்கியமாக காத்திருக்கும் முக்கிய அதிமுக புள்ளிகள்... இபிஎஸை டரியல் ஆக்கிய ஆர்.எஸ்.பாரதி...!
கேரளா இருக்கக்கூடிய தலைநகர் திருவனபுரத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் பரூஸ், கேரளா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கேசி வேணுகோபால் உள்ளிட்ட ஐந்து நாடமன்ற உறுப்பினர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளும் பயணம் செய்திருக்கிறார்கள். . விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதாவது விமானம் எந்த விசை நோக்கி செல்ல வேண்டும் என்கின்ற ரேடார் என்று செயலழுந்திருக்கிறது. இது செயலிழந்தன் காரணமாக உடனடியாக விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டிருக்கிறது. சென்னைக்கு திரும்பியதும் குறிப்பாக விமானம் தரை இறங்க அனுமதி கோறப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வானிலேயே இந்த விமானமானது வட்டமடித்துள்ளது.
இந்த விமானம் தரை இறங்கியதும் இந்த விவகாரம் குறித்து சிவில் விமான போக்குவரத்து ஆணயத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி வேணுகோபால் புகார் அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க: பஸ் டயரில் சட்டென பாய்ந்த இளைஞர்...கேரளாவில் ஓர் அதிர்ச்சி சம்பவம்