மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் என்பவர் மீது நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் கொடுத்தார். விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கொடுக்கப்பட்டன. கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொலை செய்பவர்கள் கூட இப்படி தாக்கி இருக்க மாட்டார்கள் என்று நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. நிகிதா கொடுத்த நகை திருட்டு வடக்கு உண்மையானது அல்ல என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தது. சிபி அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரிகள், மடப்புரம் கோவில், நிகிதா உட்பட ஏராளமானவரிடம் தீவிர விசாரணை நடத்தியது.

இதை அடுத்து மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கஸ்டடி மரணம் என்று சிபிஐ உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தெரிவித்தது. மேலும் நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் உண்மையில்லை என்றும் சிபிஐ தெரிவித்திருந்தது. அப்பாவியான தனது மகனை கொலை செய்து விட்டதாக அஜித்குமாரின் தாயார் மாலதி கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தார். தனது வயிறு எரிகிறது என்று சமீபத்தில் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசி இருந்தார்.
இதையும் படிங்க: அஜித் குமார் கொலை வழக்கு... விசாரணை தீவிரம்... போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன்..!
அடித்தே கொன்ற காவலர்களை சும்மா விடக்கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜாமின் கேட்டு சிறையில் உள்ள காவலர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மன்னிக்கவே முடியாத குற்றம் என்று சாடியது. காவலர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பொய் புகார் என்று சிபிஐ தரப்பில் கூறிய போதே காவலர்கள் சிறையிலேயே இருக்கட்டும் என்று நீதிமன்றம் காட்டமாக தெரிவித்து இருந்ததை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என் புள்ள தீவிரவாதியா? வயிறு எரியுது..! நிகிதாவை கைது பண்ணுங்க..! அஜித் தாய் ஆவேசம்..!