அஜித் குமார் என்ற இளைஞர் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.அவர் விசாரணையின்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக காவல்துறை முதலில் தெரிவித்தது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 44 காயங்கள் இருந்தது உறுதியானதைத் தொடர்ந்து, இது காவல் நிலையத்தில் நடந்த கொடூரமான தாக்குதலால் ஏற்பட்ட மரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாகவும், சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்றம் கூட இதனை உறுதி செய்தது. நீதி விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தற்போது வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. திருபுவனம் காவல் நிலையம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர்.

நகைகள் காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயாரிடமும் விசாரிக்கப்பட்டது. நிகிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளிட்டவை நிலுவையில் இருப்பதாகவும் நிகிதா பொய் புகார் அளித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அஜித் கொலை வழக்கு! குற்றப்பத்திரிகையில் குறை... திருப்பி அனுப்பப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில், காணாமல் போனதாக சொல்லப்படும் நிகிதாவின் நகைகள் எங்கே என்பது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பணியாற்றி வரும் மூன்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உண்மையாகவே நிகிதாவின் நகைகள் காணாமல் போனதா என்றும் நகைகளை திருடியவர் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அஜித் கொலை வழக்கு! குற்றப்பத்திரிகையில் குறை... திருப்பி அனுப்பப்பட்ட அதிர்ச்சி சம்பவம்