காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: உள்ளே நுழைந்த ரஃபேல் போர் விமானங்கள்? அலறவிட்ட இந்தியா; பதறிபோய் பாக். செய்த காரியம்!!

இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. முன்னதாக இந்த தாக்குதலை நடத்தியவர்களும் தூண்டிவிட்ட சக்திகளும் நிச்சயம் தண்டிக்கப்படுவர். இதற்கான பதிலடியை விரைவில் இந்தியா கொடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதல் முறையாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுவெளியில் பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது. பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும். பயங்கரவாதிகள் அனைவரும் கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள். இந்தியாவில் முழுமையாக பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான் எங்கள் நோக்கம். பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரை எங்கள் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2 நாட்களாக உளவு.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தாக்குதல்.. தீவிரவாதிகளின் திட்டம் அம்பலம்..!