வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

அப்பா வேஷம் போடும் திமுகவினர்… 2026இல் அம்மா ஆட்சிதான்.. ஜெயலலிதா பிறந்த நாளில் சசிகலா சூளுரை.!

தமிழகத்தில் 2026இல் ஆட்சிக்கு வருவதற்கு, திமுக பகல் கனவு காண்கிறது என்று சசிகலா பேசினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று சசிகலா பேசினார். “தமிழகத்தில் 2026இல் ஆட்சிக்கு வருவதற்கு  திமுக பகல் கனவு காண்டு கொண்டிருக்கிறது. ஜெயலிதா மீது அன்பு வைத்த மக்கள் அனைவரும் தற்போதும்கூட அவரை அம்மா என்று அழைக்கின்றனர். ஆனால், தற்போது திமுகவினர் ‘அப்பா’ வேஷம் போடத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது. பெண்கள் வாழவே தகுதியற்ற மாநிலமாகவும் தமிழகம் மாறிபோனது.

சென்னை தண்டையார்பேட்டையில் வடக்கு மண்டல காவல் ஆணையர் அலுவலகத்தில் ரவுடிகள் அட்டகாசம் செய்துள்ளனர். துணை ஆணையர் அலுவலகத்திலேயே இப்படி நடக்கிறது என்றால் வெளியில் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதை, சிந்திக்கவேண்டும்.
திமுகவினரின் வேஷம் கலையும் நேரம் வந்துவிட்டது.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல நெருக்கடிகளை அதிமுக சந்திந்தாலும், இன்னும் 100 ஆண்டு அதிமுக தொடர தொண்டர்கள் விரும்புகின்றனர். தன்னலம் பார்க்காமல் நாம் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டால் வெற்றி பெறலாம். இதுவே தமிழக மக்களுக்கு நாம் செய்யும் நன்மை. தீயசக்தியை அகற்ற அதிமுக ஒன்றிணையவேண்டும் என தொண்டர்கள் உணர்ந்துள்ளனர்.அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து நான் ஈடுபட்டுள்ளேன். எனது முயற்சி வெற்றி பெறும். அதிமுகவும் ஒன்றுபடும். அதிமுக ஆட்சி அமையும்.

இதை ஜெயலலிதா பிறந்தநாளில் தொண்டர்களுக்கு தெரிவிக்கிறேன்.
தாய், தோழி, உடன்பிறவா சகோதரியாக 34 ஆண்டு அவருடன் பயணித்த காலம் புனிதமானது. இதில் எத்தனையோ சோதனை, மகிழ்ச்சிகளை நாங்கள் சந்திந்துள்ளோம். ஒருநாளும் எங்களது துன்பங்களை யாரிடமும் சொன்னது இல்லை. இருவருமே சமாளித்து அதிலிருந்து மீண்டு வெற்றி பெற்றுளோம்.

இதையும் படிங்க: ED, income tax, போர்டுல கருப்பு பெயிண்ட் அடிக்க சொல்லுங்க பார்க்கலாம்..! திமுக மீது அண்ணாமலை அட்டாக்..!

ஜெ.ஜெயலலிதா எனும் நான் என அவர் உச்சரித்த போதெல்லாம் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ முடிந்தது. தமிழகத்தில் 2026 தேர்தலில் மகத்தான வெற்றியை நாம் பெறுவோம். இதற்கு அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும். வென்று காட்டுவோம்." என்று சசிகலா பேசினார்.

இதையும் படிங்க: ரூபாய் நோட்டுல ஹிந்தி எழுத்து இருக்கிறதுனால மத்திய அரசுக்கு திருப்பி கொடுத்துவிடுவீர்களா? சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ இ.ராஜாவுக்கு இந்திக்காரர் நறுக் கேள்வி..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी