தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது இரங்கல் செய்தியில், தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக செயல்பட்டு வந்த சலாவுதீன் முகமது சாகிப் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார்.

அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியரான அவர், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியத் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார் என்றும் தமிழகத்திலுள்ள இஸ்லாமிய மக்களுக்கு கல்வி, கலாச்சாரம் குறித்து வழிகாட்டி, அனைவர் மீதும் அன்பு செலுத்திய அவர், மத நல்லிணக்கத்திற்காகவும் பாடுபட்டார் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: ஒரு மாசமா மன உளைச்சல்; தூக்கம் இல்லை.. பொதுக்கூட்டத்தில் புலம்பி தள்ளிய அன்புமணி!!

அவரை இழந்து வாடும் இஸ்லாமிய பெருமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக அன்புமணி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கிறது திமுக அரசு.. ஊரக வளர்ச்சித்துறை விவகாரத்தில் அன்புமணி கடும் தாக்கு!