தமிழ்நாடு ›

இத செஞ்சா ஆட்சியை பிடிக்கலாம்! முதல்வர் சொன்ன #TOP SECRET..!

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சந்தித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு மூலம் கலந்துரையாடிய முதலமைச்சர், பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

விழுப்புரம், சிதம்பரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளுடன் இன்று இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில், உசிலம்பட்டி சிதம்பரம் தொகுதிகளை இந்த முறை கூட்டணிக்கு ஒதுக்க வேண்டாம் என நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க: பிளேட்டை திருப்பிப் போடுகிறார் அமித் ஷா… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!!

இந்த ஆலோசனையின் போது எந்த பிரச்சினையாக இருந்தாலும் எந்த நேரத்திலும் தலைமையிடம் கூறுங்கள் என்றும் அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

மேலும், தொகுதி வாரியாக களத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடனா? ஏன்? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी