வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

” தலைவா வா… தரணி ஆள வா”…! தாமரை சின்னம் இல்லாமல் வைரலாகும் அண்ணாமலை போஸ்டர்..!

தாமரை சின்னம் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாமல் அண்ணாமலையின் போஸ்டர் வைரலாகி வருகிறது.

தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வு, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு ஆதரவாக மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்தான். அண்ணாமலையின் பிறந்தநாள் ஜூன் 4-ம் தேதி நெருங்கி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் சில பாஜக நிர்வாகிகள் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் அல்லது பாஜகவின் தாமரை சின்னம் இடம்பெறாதது குறிப்பிடத்தக்க வகையில் கவனத்தை ஈர்த்துள்ளது. சிங்காநல்லூர், அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் “எங்கள் தலைவா… தலைமை ஏற்க வா”, “வையத் தலைமைகொள்!”, “தலைவா தரணி ஆளவா” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அண்ணாமலையின் பிரம்மாண்டமான படங்கள் மட்டுமே மைய இடத்தில் இருக்கின்றன. இந்த போஸ்டர்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் அல்லது பாஜகவின் அடையாளமான தாமரை சின்னம் இல்லாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாஜக தொடர்பான பிரசாரப் பொருட்களில் மத்திய தலைமை மற்றும் கட்சி சின்னம் இடம்பெறும் நிலையில், இந்த போஸ்டர்கள் தனிப்பட்ட அண்ணாமலை ஆதரவை மட்டுமே வலியுறுத்துவதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா..? அலட்சியம் காட்டாதீர்கள்..! அண்ணாமலை அட்டாக்..!!

இது கட்சிக்குள் உள்ள உள் நடவடிக்கைகள், தலைமை மாற்றம் மற்றும் அண்ணாமலையின் எதிர்கால அரசியல் பாதை குறித்த ஊகங்களை அதிகரித்துள்ளது. அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவலாக பேசப்படும் நிலையில் இது போன்ற போஸ்டர்கள் சர்ச்சையை மேலும் அதிகரித்து வருகிறது. 

இதையும் படிங்க: CBSE மாணவர்களுக்கு ஷாக்… சோதிக்காதீங்க..! மும்மொழி விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी