வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

இபிஎஸ் குறித்து மனம் திறக்கப்போகும் செங்கோட்டையன்… அண்ணாமலை கொடுத்த அதிரடி பதில்…!

டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரிடம் என்.டி.ஏ. கூட்டணியில் மீண்டும் சேர அண்ணாமலை வேண்டுகோள் வைத்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் வெளியேறியுள்ளனர். அவர்கள் இருவரிடமும் தான் பேசியிருப்பதாகவும், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் வைத்திருப்பதாகவும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு மக்களுக்கு நல்ல வித்தியாசமான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என டிடிவி தினகரனிடம் வேண்டுகோள் வைத்துள்ளேன். அதேபோல் மற்ற தலைவர்களும் வைத்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் மிகப் பெரிய மனிதர்கள். இருவரிடத்திலும் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் வைத்துள்ளேன் எனக்கூறினார். 

இதையும் படிங்க: செங்கோட்டையனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு… இபிஎஸுக்கு எதிராக மாஸ்டர் பிளான்…!

செங்கோட்டையன் நாளை செய்தியாளர்களைச் சந்தித்த பின் அது தொடர்பாக என்னிடம் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன். முத்துசாமி இங்கிருந்துதான் திமுகவுக்கு சென்றார். எனவே இந்த வயதில் முத்துசாமி ஆள்பிடிக்கும் வேலையை விட்டுவிட வேண்டும்” எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க: மறுபடியும் இபிஎஸ் பக்கம் போனா சோலி முடிஞ்சிடும்! நல்ல முடிவெடுங்க… செங்கோட்டையனுக்கு புகழேந்தி வேண்டுகோள்

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी