சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றி ‘விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி மிஷன்’ என புதிய மசோதா கொண்டுவந்த மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம் தெரிவித்திருந்தார். காந்தியின் பெயரை நீக்கியதையும், மத்திய நிதி பங்களிப்பை 60 சதவீதமாக குறைத்ததையும் சாடிய அவர், அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று எடப்பாடி பழனிசாமியை நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை சமூக வலைதளத்தில் வீடியோவுடன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். நேற்று நிருபர்கள் சந்திப்பில் அளித்த விளக்கத்தின் வீடியோவைப் பகிர்ந்த அவர், புதிய மசோதாவில் 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தியுள்ளதாகவும், இது ஊரக மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினை நேரடியாகத் தாக்கிய அண்ணாமலை, “நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சமஸ்கிருத மொழியில் வைத்துக்கொண்டு, ஹிந்தி எதிர்ப்பு என்று இன்னும் நாடகமாடிக் கொண்டிருப்பது நகைமுரண்” என்று கிண்டலடித்தார்.
இதையும் படிங்க: தந்தைக்கு சிலை வைக்கிறதா? பள்ளி கட்டிடங்களா? எது முக்கியம் ஸ்டாலின்? அண்ணாமலை கேள்வி
இந்தத் திட்டம் குறித்து, நேற்றே தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin.
ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் சமஸ்கிருத மொழியில் வைத்துக் கொண்டு, ஹிந்தி… https://t.co/q1apv2Mk79 pic.twitter.com/48bbrFhKpe
— K.Annamalai (@annamalai_k) December 17, 2025
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்தது நினைவிருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, “முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா?” என்று கடுமையாக விமர்சித்தார்.
புதிய மசோதா குறித்து அதிமுகவின் நிலைப்பாட்டை விளக்காமல் ஸ்டாலின் கேள்வி எழுப்புவது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி என்று பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பதிலடி தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக-பாஜக இடையேயான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக இவ்விவகாரத்தில் இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
இதையும் படிங்க: இதுலாம் முதல்வர் பண்ணுற காரியமா? இவ்ளோ தப்பு பண்ணிட்டு சுப்ரீம் கோர்ட் எதுக்கு போறீங்க! அண்ணாமலை விளாசல்!