வாக்கு திருட்டு பிரச்சனை இந்தியாவில் வீரியம் எடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டை வருகிறார். பல்வேறு ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்ட நிலையில் இதற்கு தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. வேண்டுமென்றே ராகுல் காந்தி புகார் கூறுவதாகவும் வாக்கு திருட்டு நடக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது.
வாக்குத்திருட்டு எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்தது. போலி இணைய முகவரியை உருவாக்கி அதன் மூலம் வாக்காளர்களை நீக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டது. 5 படிநிலைகளில் வாக்குகள் நீக்கப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. வாக்காளர் நீக்கத்திற்காக தனியாக மென்பொருளை உருவாக்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவே வாக்குத்திருட்டு நடப்பதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது.

இந்தியா முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பாஜக அரசுக்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சம்பவம் நடந்ததும் விஜய் எதுக்கு ஓடி ஒளியணும் ? ஆ.ராசா சாடல்...!
வாக்கு திருட்ட மற்றும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு தமிழக அரசும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் குறித்து திமுக எம்.பி. ஆ. ராசா விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு திருடர்கள் வந்துவிட்டனர் என்றும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 2020 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டுக்கான தேர்தல் மட்டுமல்ல, இந்தியாவுக்கான தேர்தல் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ஏசப்பா மீது ஆணையாக… தெளிவா சொல்லிட்டாரு சீமான்! இனிமே இதான் ரூட்…!