திமுக ஆட்சி காலத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு வீட்டில் இன்று காலையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர், திமுக எம்எல்ஏக்களின் சட்டசபை கொறடாவாகவும் இருந்து வருகிறார். திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவருமான எ.வ.வேலுவின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் திருவண்ணாமலை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

மேலும் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது பணி நியமனம் செய்வதில் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது.
இதையும் படிங்க: “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அறிந்ததும் திமுகவினர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து வருகின்றனர். வழக்கறிஞர் அணியை சேர்ந்த சரவணன் என்பவர் சந்தித்தார். பிறகு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அவரை நேரில் சந்தித்து இருந்தார். இதைத் தொடர்ந்து திமுக எம். பி. ஆ. ராசா, எ.வ.வேலுவை சந்திக்க சென்றார். வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் திமுக முக்கிய நிர்வாகிகள் அவரை சந்தித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அட அழுமூஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!