கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள சி.ஜே.பெல்லாட் அரசு கல்லூரியில் மத உடை கட்டுப்பாடு சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. சில மாணவிகள் புர்கா அணிந்து வகுப்புகளுக்கு வருவதை எதிர்த்து, சக மாணவிகள் சிலர் கல்லூரி வளாகத்தில் காவி நிற ஸ்கார்ஃப் அணிந்து போராட்டம் நடத்தினர். நிலைமை பதட்டமாக மாறியதால், கல்லூரி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அனைத்து மாணவிகளும் அதிகாரப்பூர்வ கல்லூரி சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என்று கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள சி.ஜே.பெல்லாட் அரசு கல்லூரியில் மத ரீதியிலான மோதல் வெடித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. புர்கா மற்றும் காவி துப்பட்டா அணிவது தொடர்பாக இந்து மற்றும் இஸ்லாமிய சமூக மாணவிகளிடையே மோதல் வெடித்தது. சில மாணவிகள் வகுப்புகளுக்கு புர்கா அணிந்து வருவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நாங்கள் அதற்கு போட்டியாக காவி கலர் துப்பட்டா அல்லது ஸ்கார்ப் அணிந்து வருவோம் என அறிவித்தனர்.
புர்கா vs காவி துப்பட்டா:
புர்கா அணிந்து வகுப்புகளுக்கு வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மதத்தைச் சேர்ந்த வேறு சில மாணவிகள் மற்றும் மாணவர்கள் காவி நிற ஸ்கார்ஃப் அணிந்து வகுப்பறைகளுக்கு சென்றனர். ஹிஜாப் அணிவதை நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். புர்கா அணிந்து கல்லூரிக்கு வந்தால், நிச்சயமாக காவி நிற ஸ்கார்ஃப் அணிந்து வருவோம் என்று அவர்கள் கூச்சலிட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு, பி.ஏ. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இதேபோன்ற போராட்டம் நடந்தது. நிர்வாகத்தின் தலையீட்டால், போராட்டம் தணிந்தது. ஆனால் சமீபத்தில், மீண்டும் போராட்டம் வெடித்தபோது, நிர்வாகம் ஒரு அதிர்ச்சியூட்டும் முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: இண்டிகோ விமான சேவை நெருக்கடி எதிரொலி..!! புதிய விதிகளை திரும்பப் பெற்றது DGCA..!!
பதற்றத்தைக் கவனித்த கல்லூரி நிர்வாகம் வியாழக்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்தி இறுதி முடிவை எடுத்துள்ளது. ஒழுக்கத்தைப் பேணுவதற்காக இனி மாணவிகள் கட்டயமாக கல்லூரி சீருடையை மட்டுமே அணிந்து வர வேண்டும் என அதிகாரப்பூர்வ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மாணவிகளின் விருப்பப்படி கல்லூரியில் உள்ள அனைத்து மாணவிகளிலும் சீருடையில் வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அனைத்து மாணவிகளும் இந்த முடிவை மதித்து பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. கல்லூரி முதல்வர் வீரேஷ் கூறுகையில், "இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல் சண்டை நடந்தது. பின்னர் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகு சண்டை தணிந்தது. ஆனால் இந்த பிரச்சினையில் மீண்டும் போராட்டங்கள் எழுந்தபோது, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். மாணவ, மாணவிகள் அதற்கு ஒப்புக்கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மேகதாதுவில் அணைகட்ட விட மாட்டோம்!! தஞ்சையில் விவசாயிகள் போர்க்கொடி!! ரயில் மறியல் போராட்டம்!