பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பீகார் தேர்தல் களம் சூடு பிடித்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீஹார் முதலமைச்சராக இருந்தார். இவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வந்தார். இதனிடையே, பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நாளை பீகார் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் 2 கட்டங்களாகப் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 67% வாக்குகள் பதிவான நிலையில் முடிவுகள் வெளியாகவுள்ளன.
இதையும் படிங்க: பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதற்கட்டத்தில் வரலாற்று சாதனை.. 64.66% வாக்குப்பதிவு..!!
ஏற்கனவே பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகவும் வாக்குத்திருட்டு தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு இடையில் தான் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடந்த முடிந்தது. நாளை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதல்கட்டமாக 121 தொகுதிகளில்.. வாக்குப்பதிவு விறுவிறு..!!