சாலைகளில் ஆபத்தான முறையில் பைக் ரேஸ் நடத்துவது இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆபத்தான போக்காக உருவெடுத்துள்ளது. இந்த செயல், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சமூகத்திற்கு பல எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகிறது.
சாலைகளில் ஆபத்தான பைக் ரேஸ் என்பது, பொதுவாக நகர்ப்புறங்களில் அல்லது நெடுஞ்சாலைகளில் இளைஞர்கள் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி, ஒருவரையொருவர் பந்தயத்தில் வெல்ல நினைக்கின்றனர். இதில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் விதிகளை மீறி, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணித்து, தங்களது உயிரையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துகின்றனர். பெரும்பாலான இந்த ரேஸ்கள் இரவு நேரங்களில் அல்லது வாகன நெரிசல் குறைவாக இருக்கும் இடங்களில் நடைபெறுகின்றன.

இந்த ஆபத்தான பைக் ரேஸ்களின் விளைவுகள் மிகவும் மோசமானவை. அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவு மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றாதது ஆகியவை விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இவை பந்தயத்தில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன. ஒரு சிறிய தவறு கூட பெரிய விபத்தாக மாறி, பல உயிர்களைப் பறிக்கின்றன.
இதையும் படிங்க: இளசுகளின் அட்டகாசம்! அனல் பறக்க பைக் ரேஸ்... துரத்தி துரத்தி வெளுத்த போலீஸ்...!
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் பாலத்தில் பைக் ரேஸின்போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ரேஸில் ஈடுபட்ட இளைஞரும், எதிரே ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டியும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ரேஸில் ஈடுபட்ட சுஹைல், எதிரே வந்த குமரன் ஆகியோர் உயிரிழந்தனர். சோயல் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரேஸை தடுக்க தடுப்புகள் வைத்திருந்தும் மீறி ரேஸ் சென்றுள்ளனர். இதனால் இந்த விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் வன்முறை… சம்பவ இடத்திலிருந்து டூவீலர் பறிமுதல்! 7 தனிப்படைகள் அமைத்து வலைவீச்சு…!