பைக் திருட்டு சம்பவங்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் அதிகமாக நிகழ்கின்றன. சென்னை, புதுச்சேரி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகை அடர்த்தி, வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறை ஆகியவை திருடர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன. இவர்கள் ஜிபிஎஸ் கருவிகளை அகற்றுவது, ரகசிய உரையாடல் தளங்களைப் பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி காவல்துறையின் கண்களை ஏமாற்றி வந்தனர். இதுபோன்ற நூதன முறைகள் காவல்துறையினருக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.
பைக் திருட்டைத் தடுப்பதற்கு பொதுமக்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துதல், உயர்தர பூட்டுகளைப் பயன்படுத்துதல், ஜிபிஎஸ் கருவிகளை பொருத்துதல், சிசிடிவி கண்காணிப்பு உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல் போன்றவை திருட்டைத் தடுக்க உதவும். மேலும், திருடப்பட்ட வாகனங்களை மறுவிற்பனை செய்யும் கும்பல்களை கட்டுப்படுத்த, பொதுமக்கள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கும்போது ஆவணங்களை கவனமாக சரிபார்க்க வேண்டும்.

இதற்கிடையில் மத்திய பிரதேசத்தில் பைக் திருட சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. காரணம் 80 ஆயிரம் ரூபாய் பைக் திருட சென்ற இடத்தில் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் தாங்கள் கொண்டு சென்ற 2 லட்சம் ரூபாய் பைக்கை அங்கேயே விட்டு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை திருடச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஹாஸ்பிட்டலில் பச்சிளம் குழந்தைகளை கடித்த எலிகள்! ம.பி. யில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…
திருடி விட்டு தப்ப முயன்ற போது பைக் இயங்காமல் போகவே அதற்குள் வியாபாரியின் கூக்குரலை கேட்டு கூட்டம் திரண்டதாக தெரிகிறது. மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் பைக்கில் அப்படியே விட்டு தப்பி உள்ளனர். 80 ஆயிரம் ரூபாய் திருட சென்று இரண்டு லட்ச ரூபாய் பைக்கை திருடர்கள் இழந்துள்ளனர்.
இதையும் படிங்க: உங்க வண்டி மேல FINE இருக்கா! மாட்டிப்பீங்க பங்கு... விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க