தமிழக வெற்றிக் கழகத்துடைய தலைவர் விஜய் மதுரை மாநில மாநாட்டில் திமுகா பாஜகவை கடுமையாக அட்டாக் செய்திருந்தார். இந்த முறை அதிமுகவையும் விட்டு வைக்கவில்லை. பேர் சொல்லலைனாலும் பாஜகவின், ஆர்எஸ்எஸின் அடிமை கட்சி அப்படின்னு கடுமையாக அட்டாக் செய்திருந்தார். இதற்குதான் உடனடியாக அதிமுகவுடைய பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி வெறும் சினிமா வசனம் மட்டும் பேசி முதலமைச்சர் ஆகிவிட முடியாது. அப்படின்னு பதிலடியும் கொடுத்தாரு. தொடர்ச்சியாக மாஜிக்களும் வரிசை கட்டி தமிழக வெற்றிக் கழகத்தை வறுத்தெடுக்க தொடங்குனாங்க.
இப்படி மாறி மாறி ரெண்டு தரப்பும் மோதிக்கொள்வதை, அதாவது தவெக மற்றும் அதிமுக இடையிலான மோதலை உள்ளூர ரசிக்கிறது அதிமுக கூட்டணில இருக்கின்ற பாஜக தான் எனக்கூறப்படுகிறது. பாஜகவை பொறுத்தவரைக்கும் இங்க தமிழ்நாட்டுக்குள்ள தேசிய கட்சி வெர்சஸ் மாநில கட்சின்னு களம் மாறணும்னு நினைக்கிறாங்க. ஏன்னா இங்க வேரூன்றி கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சி அதிகாரத்தையும் பிடிக்கணும் அப்படிங்கிறது தான் பாஜகவுடைய கனவு. இப்ப விஜய்யும் எடப்பாடியும் கூட்டணி சேர்ந்தா மறுபடியும் மாநில கட்சிகளுக்கு இடையிலான போட்டி மாறும்.
ஏதோ ஒரு மாநில கட்சிதான் ஆட்சி அதிகாரத்தையும் பிடிக்கும். இது பாஜகவுடைய கனவுகளை நொறுக்குவது போல ஆகிவிடும். ஏற்கனவே எடப்பாடி பாஜக கூட்டனில இருந்து ஜம்ப் அடித்தவர் தான், மறுபடியும் இப்ப பாஜக கூட்டணியில் இணைச்சியிருக்காரு. விஜயும் சரி எடப்பாடியும் சரி ரெண்டு பேருமே எதிரெதிர் கட்சிகளை அட்டாக் பண்ணாம பேசிட்டு இருந்தாங்க. இதனால் இந்த ரெண்டு கட்சிகளும் எப்ப வேணுன்னாலும் கூட்டணி சேர்ந்திடுவாங்க, பாஜகவை விட்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் பல்டி அடிக்க வாய்ப்பிருக்குன்னு பாஜகவிற்கு ஒரு டவுட் இருந்துகிட்டே இருந்தது .
இதையும் படிங்க: அடுத்த முதல்வர் இபிஎஸ்! வாங்க உழைக்கலாம்.. பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை சூளுரை..!
இப்ப ஓபனாகவே விஜய் அதிமுகவை அட்டாக் செய்ய, அவங்களும் தவிர்க்க முடியாம விஜய் அட்டாக் செய்ய அப்பாடா இப்ப கூட்டணிக்கான கதவுகள் இன்னும் வலுவா மூட தொடங்கி இருக்க. இரண்டு கட்சிகளுக்கும் இடையே இடைவெளி அதிகரிச்சிருக்கு. இப்ப நம்ம ரூட்டு கிளியரு அப்படின்னு ஹாப்பி மோடுக்கு திரும்பி இருக்கு பாஜக அப்படிங்கறாங்க கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிற அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: மாநாட்டில் பேச வரைமுறை இருக்கு! விஜய் ஏதோ அவதார புருஷரை போல.. விளாசிய மாஜி அமைச்சர்..!!