திருவள்ளூர் மாவட்டம் கொண்டாரபுரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஒரு சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளியின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மோகித் என்ற மாணவன் உயிரிழந்து உள்ளார். மதிய உணவு இடைவேளைக்காக நடைமேடைமீது அமர்ந்து மோகித் உணவு அருந்திக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பள்ளியின் பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்தது. மோகித்தின் மேலே சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுவர் இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கிய நிலையில் துடிதுடித்து மோகித்தின் உயிர் போய் உள்ளது.

இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்த அசம்பாவிதம் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாணவனின் சடலத்தை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என கூறி வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் மூன்று லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குனிஞ்சு கும்பிடு போட எதுக்கு அதிமுக பெயர்? நான் கேட்கலப்பா... அவங்கதான்..! முதல்வர் ஸ்டாலின் விளாசல்..!
இந்த நிலையில், தமிழக அரசின் கல்வித் துறையின் நிர்வாக சீர்கேட்டால் தான் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியானதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டுமெனவும், தேசிய பட்டியலின ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: பிரிவினை அரசியல்... மதவெறி பரப்பும் சனாதன கும்பல்... விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்...