அண்மைக் காலங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் பரபரப்பு ..!! காலையிலேயே வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்..!! எங்க தெரியுமா..??
இதனிடையே, சென்னையில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் துணை தூதரகங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா, இலங்கை, ஸ்வீடன், மலேசியா, ஜப்பான், மாலத்தீவு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்பட்ட துணை தூதரகங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாகத்துறை தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிரட்டப்போகும் 'மோன்தா'..!! சென்னையில் இருந்து எத்தனை கி.மீ தூரத்தில் இருக்கு புயல் சின்னம்..??